கோடையில் பேரிச்சம்பழம்: சாப்பிடலாமா கூடாதா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

Dates: இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த உலர் பழத்தின் சுவை வித்தியாசமானது. பிற பழங்களை விட பேரிச்சம்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2023, 01:54 PM IST
  • கோடையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
  • முதலில் அவற்றை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஏனெனில் இது அவற்றின் உஷ்ணத்தை குறைக்க உதவும்.
கோடையில் பேரிச்சம்பழம்: சாப்பிடலாமா கூடாதா? பக்க விளைவுகள் ஏற்படுமா?  title=

பேரிச்சம்பழம் நன்மைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேரிச்சம்பழம் மிகவும் பிடித்தமான ஒரு உலர் பழமாக உள்ளது. இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த உலர் பழத்தின் சுவை வித்தியாசமானது. பிற பழங்களை விட பேரிச்சம்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. இது நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை வழங்குகிறது. விரத நாட்களில் சிலர் பேரீச்சம்பழம் சாப்பிட்டு விரதத்தை முடிப்பதற்கு இதுவே காரணம். பேரிச்சம்பழத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

இது பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக உள்ளது. பேரிச்சம்பழம் இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் கந்தகம் ஆகியவை பேரீச்சம்பழத்தில் இருப்பதால், உடலை பல நோய்களில் இருந்து இது காக்கிறது. 

பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. பேரிச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற பொதுவான சந்தேகம் இருப்பதுண்டு. 

குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சூடான கோடை நாட்களில் பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு சில தீங்குகளை ஏற்படுத்தும். கோடை காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடும் முன் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காண்லாம். 

சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா?

கோடை மாதங்களிலும் பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம். இருப்பினும், அப்படி சாப்பிட்டால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். கோடையில் பேரீச்சம்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, அவற்றில் உள்ள அதிக அதிக அளவு சர்க்கரையால் ஏற்படும் விளைவு. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த விதைகளில் இருக்கு அதற்கான வழி

அதிக சர்க்கரை அளவு

பேரீச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பான பழம் ஆகும். அவற்றை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகையால் எந்த பருவத்தில் சாப்பிட்டாலும், பேரீச்சம்பழங்களை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

கவலைக்குரிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பேரிச்சம்பழம் உஷ்ணம் நிறைந்தவை. அதாவது, பேரிச்சம்பழம் உடலின் உட்புற வெப்பநிலையை அதிகரிக்கும். ஆகையால் இது வெப்பமான கோடை மாதங்களில் சிக்கலை ஏற்படுத்தும். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிச்சம்பழம் பயனுள்ளதாக இருக்கும். 

பயன்களும் அதிகம்

உஷ்ணத்தை ஏற்படுத்தினாலும் இவை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. எனவே கோடையில் அவற்றை ஏன் கைவிட வேண்டும்? பேரிச்சம்பழம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகை நோயாளிகளுக்கு சிறந்தது. ஆகையால் இவற்றை குறைந்த அளவில் உட்கொண்டால் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ளலாம். 

கோடையில் பேரீச்சம்பழம் சாப்பிட டிப்ஸ்

கோடையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில், பேரீச்சம்பழம் சாப்பிடுவதற்கு முன், அவற்றை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கவும். ஏனெனில் இது அவற்றின் உஷ்ணத்தை குறைக்க உதவும். பேரீச்சம்பழம் சத்தானது என்பதில் சந்தேகமில்லை. ஆகையால். இவற்றை கோடை காலத்தில் தினமும் 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News