போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்

போலி சமையல் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI கொடுத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2024, 05:18 PM IST
  • சமையல் எண்ணெய்யில் இருக்கும் போலிகள்
  • மோசடியாக மார்க்கெட்டில் விற்பனை ஆகின்றன
  • போலி சமையல் எண்ணெய் கண்டுபிடிக்க டிப்ஸ்
போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள் title=

இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக போலி மற்றும் தரமில்லாத மசாலாக்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் மார்க்கெட்டில் விற்பனையாகின்றன. அதுவும் பிரபலமான பிராண்டுகளின் பெயரில் அவை விற்கப்படுவதால் மக்களும் அது குறித்து சந்தேகம் கொள்வதில்லை. லாப நோக்கத்துக்காக விஷமிகள் செய்யும் இத்தகைய மோசடிகள், ஒவ்வொருவரின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழிக்கிறது. இதில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். சமையல் எண்ணெய்களில் கூட இப்போது மோசடிகள் நடக்கின்றன. பல டூப்ளிகேட் எண்ணெய்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

இவை உங்கள் பணத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும். இதனால், இத்தகைய போலி சமையல் எண்ணெய்களை எப்படி அடையாளம் காண்பது என தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பிரத்யேகமாக FSSAI விளக்கம் கொடுத்திருக்கிறது. 

மேலும் படிக்க | இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!

சமையல் எண்ணெயில் கலப்படம்

சமையல் எண்ணெய் பெரும்பாலும் ட்ரை-ஆர்த்தோ-கிரெசில்-பாஸ்பேட்டுடன் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஒரு பாஸ்பரஸ் கொண்ட கரிம கலவை அல்லது பூச்சிக்கொல்லி. இதனால் மாரடைப்பும் ஏற்படலாம்.

போலி சமையல் எண்ணெய்யை எவ்வாறு கண்டறிவது?

ஒரு பாத்திரத்தில் 2 மில்லி எண்ணெய் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெண்ணெய் சேர்க்கவும். எண்ணெயின் நிறம் மாறவில்லை என்றால், அது தூய்மையானது மற்றும் சமையலுக்கு பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது. ஆனால் சிவப்பு நிறமாக மாறினால், எண்ணெய் தூய்மையற்றது மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வீட்டில் எண்ணெயின் தரத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?

சுத்தமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தூய எண்ணெய் கெட்டியாகிவிடும், அதே சமயம் கலப்பட எண்ணெய் திரவமாக இருக்கும். ஆலிவ் எண்ணெய் 30 நிமிடங்களில் திடப்படுத்தத் தொடங்குகிறது. மேலும், எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பதை வாசனையை வைத்து யூகிக்கலாம். ஏனெனில் கலப்பட எண்ணெயில் இல்லாத இயற்கையான மணம் சுத்தமான எண்ணெய்க்கு உண்டு. மிகக் குறைந்த விலையில் நீங்கள் எந்த எண்ணெயையும் பெறுகிறீர்கள் என்றால், அது மலிவான பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என்று தெளிவாக அர்த்தம்.

மேலும் படிக்க | கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News