ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?

அண்மைக்காலமாக தீவிர உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2022, 06:00 AM IST
  • உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு
  • இதற்கான முக்கிய காரணம் என்ன?
  • மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி? title=

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். ஜிம்மில் பயிற்சியின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தொடர் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் மரணத்தை தழுவ நேரிட்டது. 

கடந்த காலங்களில் சில திரைப்பட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்புக்கு ஆளான சம்பவங்கள் அதிகம். பலர் இளம் வயதிலேயே வாழ்க்கையை இழந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜிம்முக்கு செல்வது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதால் இதய நோய்க்கான ஆபத்து ஏன் அதிகரிக்கிறது? என்ன தவறுகள் இதற்குக் காரணமாகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி? என்பதையும் தெரிந்துகொள்வோம்

நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, ஜிம்மிற்கு செல்லத் தொடங்கினால், இருதயநோய் நிபுணரிடம் உங்களைப் பரிசோதித்துக்கொள்வது அல்லது மன அழுத்தப் பரிசோதனையை முதலில் செய்துகொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கு மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் அல்லது உடற்பயிற்சியின் போது லேசான தலைவலி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். எந்த விதமான அதிகப்படியான உடற்பயிற்சியையும் தவிர்க்க வேண்டும். இதய நோய் அபாயத்தைக் குறைக்க மிதமான உடற்பயிற்சி போதுமானது. உடற்பயிற்சி சீரான முறையில் செய்யப்பட வேண்டும். உடற்பயிற்சியின் போது உங்களை சரியாக நீரேற்றமாக வைத்திருங்கள். முழுநேர ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News