புதுடெல்லி: முட்டை மிகவும் சத்தான உணவுகளில் ஒன்று என்று உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். உடலின் ஊட்ட சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் முட்டையில் காணப்படுகின்றன. இதில் புரதம், வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உங்களை ஆரோக்கியமாக வைக்கா ஊஆஊ.
இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதிக முட்டையை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு உள்ளது. இது பல வயிற்று பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே தினமும் எத்தனை முட்டைகள் சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை அறிந்து கொள்வோம் ...
முட்டையை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 200 மி.கி கொழுப்பு உள்ளது. தினமும் 300 மி.கி.க்கு மேல் கொழுப்பை உட்கொள்வது நல்லது அல்ல. எனவே முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
ALSO READ | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் உடல் நலனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!
ஒரு நபர் ஒரு நாளில் எத்தனை முட்டைகளை சாப்பிட வேண்டும் என்று கேட்டால், பதில் சொல்வது கடினம். ஏனெனில் அது அந்த தனிப்பட்ட நபரைப் பொறுத்தது. சிலருக்கு அதிக முட்டைகளை உண்பதால், பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கலாம். சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சராசரி ஆரோக்கியமான ஒரு நபர் வாரத்தில் ஒரு நாள் 7 முட்டைகள் வரை சாப்பிடலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ஏதேனும் நோய் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் வாரத்தில் ஒரு நாள் 3 முட்டைகளை சாப்பிடலாம்.
முட்டைகள் சத்தானவை தான். ஆனால் அதற்காக நீங்கள் அதிக முட்டைகளை சாப்பிட வேண்டும் என்று அர்த்தமல்ல. அலவிற்கு மிஞ்சி எதையுமே சாப்பிடக் கூடாது எந்த சத்தான உணவையும் அதிக அளவில் சாப்பிடுவது, அது முட்டையாக இருந்தாலும் உங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
முட்டைசூட்டை ஏற்படுத்தும் உணவு. அதனால், கோடையில் அதிக முட்டைகளை சாப்பிடுவது உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதனால், சிறு குழந்தைகளுக்கு பல உடல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
ALSO READ | வேக வைத்த முட்டை சாப்பிட்ட பின் சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR