Home Workout Exercises For Rapid Weight Loss : நம்மில் பலர், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருப்போம். இதற்கான பலன் கிடைக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களை செய்த பின்பு, சில நேரங்களில் அந்த பலன் கிடைக்காமல் போகலாம். எடையை குறைப்பதற்கு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. எந்த உடற்பயிற்சியை செய்தால் எந்த தசைக்கு நல்லது, எந்த இடத்தில் தசை குறையும், எந்த தசை வலுவாகும், எவ்வளவு கலோரிகளை அந்த உடற்பயிற்சி குறைக்கும் போன்ற தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். உடல் எடையை வேகமாக குறைக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதிலும் இவற்றை, வீட்டிலுருந்தவாறே செய்து எடையை எளிமையாக குறைக்கலாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் என்பதை இங்கு பார்ப்போமா?
நடை பயிற்சி:
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க நல்ல ஏரோபிக் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. வேகமாக நடப்பது உடலில் உள்ள கலோரிகளை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றது. இது, உங்களின் தினசரி நடவடிக்கைகளையும் எளிமையாக்குகிறது. இது குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளில், 70 கிலோ எடை இருப்பவர்கள், 30 நிமிட நடைப்பயிற்சியில் 167 கலோரிகளை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங்-ஜாக்கிங் ஆகிய இரண்டுமே உடல் எடையை குறைக்கும் நல்ல ஏரோபிக் உடற்பயிற்சிகளாகும்.
எப்படி செய்ய வேண்டும்?
>15 நிமிடம் நடைப்பயிற்சி
>15 நிமிடம் ஜாக்கிங்
>வேகமாக 15 நிமிடங்கள் நடக்க வேண்டும்
>மெதுவாக 10 நிமிடங்கள் ஓட வேண்டும்
>5 நிமிடம் உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்m
கயிறு தாண்டுதல்:
கயிறு தாண்டுதல் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இது, உடலையும் வலுவாக்க உதவும். தினமும் கயிறு தாண்டுதல் பயிற்சி செய்வதால், மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை குறைவதாக மருத்துவர்களும் இதன் மூலம் பயனடைந்தவர்களும் தெரிவிக்கின்றனர். இந்த உடற்பயிற்சியினால், இதயத்துடிப்பு அதிகரித்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது.
மேலும் படிக்க | மலச்சிக்கல் பிரச்சனையா? ‘இதை’ வாயில் போட்டு மெல்லுங்கள்..எல்லாம் சரியாகிடும்..
எப்படி செய்ய வேண்டும்?
>தரையில் நேராக முதலி நிற்க வேண்டும்
>இரு கால்களும் நேராக இருக்க வேண்டும்
>இரு கைகளும் இரு தொடைகளுக்கு அருகே ஒட்டியபடி இருக்க வேண்டும்
>பிறகு ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும்
>முதல் முறை செய்பவராக இருந்தால் சிறிது நேரம் செய்யத்தொடங்கி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.
ப்ளாங்க்ஸ்:
முழு உடற்பயிற்சிக்கு மிகவும் சிறந்த உதாரணம், ப்ளாங்க் உடற்பயிற்சிதான். இது, உடலில் உள்ள தசைப்பகுதிகளை குறைக்க உதவுகிறது. இதை செய்கையில் தோள்பட்டை, பின்பகுதி, இடுப்பு பகுதி ஆகியவை வலுவடையும். இந்த பயிற்சியை செய்வதால் உடல் எடையை வேகமாக இழக்கலாம் என்கின்றனர், மருத்துவர்கள்.
ஸ்குவாட்:
நம் ஊரில் இதை தோப்புக்கரணம் என்று கூறுவர். இதை கொஞ்சம் மெருகேற்றி உலகம் முழுவதும் ஸ்குவாட் என்ற உடற்பயிற்சியாக செய்கின்றனர். இந்த உடற்பயிற்சியால் உடலில் உள்ள கலோரிகள் குறையும், மேலும் கொழுப்பு சேராமலும் தடுக்கலாம். இதை முதல் முறை செய்பவராக இருந்தால் முதலில், நாள் ஒன்றுக்கு 12-15 ஸ்குவாட்ஸ் வர செய்து பழக வேண்டும். படிப்படியாக இதை உயர்த்திக்கொண்டே போகலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்பார்வை கூர்மைக்கு... ‘இந்த’ சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ