உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று, இவை அவ்வளவு எளிதாக அறிகுறிகளை வெளியில் காட்டிவிடாது. இருப்பினும் உடலின் மற்ற பாகங்களான கால்கள் அல்லது நகங்கள் போன்றவை சில சமயங்களில் சில அறிகுறிகளைக் வெளிப்படுத்தும். இதனை கவனித்து தக்க சமயத்தில் நீங்கள் மருத்துவரை அணுகலாம். கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் நமது உடலில் என்னென்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை காண்போம்.
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
- அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி உங்கள் கால்களில் உணர்வின்மை ஏற்படும். இதனால் வலி மற்றும் அசௌகரியம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படும்.
- உங்கள் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவுகள் படிந்து அடைப்பு ஏற்பட்டு எம்போலைசேஷன் சிண்ட்ரோம் ஏற்படும், இதனால் குளிர்காலத்தில் தோலில் நீலம் அல்லது ஊதா நிற வலை போன்ற வடிவங்கள் தோன்றலாம்.
- இரத்த நாளங்களில் பிளேக் உருவாவதால் மூலம் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வெளிறிய நகங்கள் ஏற்படும்.
- மூக்கிற்கு அடுத்ததாக கண் இமைகளின் மூலைகளில் மஞ்சள் நிறத்தில் வளர்ச்சி ஏற்படும், இதற்கு சாந்தெலஸ்மா என்று பெயர். இது வந்துவிட்டாலே உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாகிவிட்டது என்று அர்த்தமாகும், இது ஆபத்தானது இல்லை என்றாலும் இதனால் எதிர்காலத்தில் இதயப் பிரச்சனைகள் ஏற்படும்.
- உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் சொரியாசிஸ் போன்ற பல தோல் சம்மந்தமான நோய்கள் ஏற்படும், இதனால் உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் குறையும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ