நமது உடலிலுள்ள ரத்தத்தில் காணப்படும் ஒருவகையான மெழுகு பொருள் தான் கொலஸ்ட்ரால் ஆகும், நமது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு இந்த கொலஸ்ட்ரால் தான் உதவுகிறது. கொலஸ்ட்ரால் மொத்தம் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (ஹெச்டிஎல்) மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) என இரண்டு வகைகளாக உள்ளது. ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயம் தொடரான சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக அளவு கொலஸ்ட்ரால் இதய நோய்கள், பக்கவாதம், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நல்ல உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியமானது. அதிக கொலஸ்ட்ரால் அளவால் அவதிப்படுபவர்களுக்கென்றே ஒரு சுலபமான மற்றும் ஆரோக்கியமான ரெசிப்பி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகள் உள்ளது, ஆரோக்கியமான உணவு பக்கவழக்கங்களை நாம் பின்பற்றினாலே கொலஸ்ட்ரால் அளவுகளை எளிதாக குறைத்துவிடலாம். இப்போது அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் ஒரு சூப்பரான உணவை எப்படி தயார் செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
தேவையான பொருட்கள்:
1) கொத்தமல்லி - 50 கிராம்
2) புதினா - 20 கிராம்
3) பூண்டு - 20 கிராம்
4) ஆளிவிதை எண்ணெய் - 15 கிராம்
5) இசப்கோல் - 15 கிராம்
6) உப்பு (சுவைக்கு ஏற்ப)
7) எலுமிச்சை சாறு - 10 மிலி
8) தேவைக்கேற்ப தண்ணீர்
செயல்முறை:
மேலே உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் போட்டு ப்ளெண்ட் செய்தால் இந்த ரெசிப்பி சில நிமிடங்களில் தயார் ஆகிவிடும்.
கொத்தமல்லி மற்றும் புதினாவின் நன்மைகள்:
குளோரோபில் நிறைந்த இந்த மூலிகைகள் பலரது வீடுகளிலும் காணப்படுகிறது, செரிமானம் மற்றும் அவற்றின் உயர் நார்ச்சத்து கொண்ட இவை உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பூண்டின் நன்மைகள்:
பூண்டு இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுத்து கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இசப்கோலின் நன்மைகள்:
இது குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பித்த அமிலங்களுடன் இணைந்து உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கிறது.
ஆளி விதைகளின் நன்மைகள்:
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசெரிட்களைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஒமேகா-3 கொழுப்புகளின் சிறந்த ஆதாரமாகவும் ஆளிவிதைகள் இருக்கிறது.
மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ