ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லையா... ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்!

உயர் இரத்த அழுத்தம் உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு முறையயும் மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2022, 09:02 PM IST
  • ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
  • பூசணி விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
  • ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லையா... ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்!  title=

மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக, உயர் ரத்த அழுத்த பிரச்சனை இன்று மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது இளைஞர்களிடையேயும் மிகவும் பொதுவாக காணப்படும் நோய்களில் ஒன்றாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம்  உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், அதிக காரம், இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இது போன்றவற்றை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சில பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை சீராக்கலாம்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சில உணவுகள்

நாவல் பழம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் நாவல் பழம் உதவுகிறது. நாவல் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. நாவல் பழத்தில் உள்ள  உள்ள எந்தோசயனின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கின்றன. எனவு இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

பூசணி விதை

பூசணி விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பொட்டாசியம், மெக்னீசியம் இதில் காணப்படுவதால், இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

பிஸ்தா

பிஸ்தா ஒரு உலர் பழமாகும், அதை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இதை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பிஸ்தாவில் பொட்டாசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

மீன் உணவுகள்

கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News