மெட்டபாலிஸத்தை அதிகரித்து... கொழுப்பை எரிக்கும் ‘சில’ மூலிகைகள்!

Herbs for Weight Loss: உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், உங்கள் உடல் எடை வேகமாக குறைகிறது. இது மட்டுமல்லாமல், உங்கள் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உங்கள் செரிமான செயல்முறை சிறப்பாக செயல்படும்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 25, 2023, 02:41 PM IST
  • உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், உங்கள் உடல் எடை வேகமாக குறைகிறது.
  • ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்க சதாவரி என்னும் அஸ்பாரகஸ் பயன்படுத்தப்படுகிறது.
  • நார்ச்சத்து நிறைந்த ஓமம் எடையைக் குறைப்பதிலும், செரிமான அமைப்பை மேம்படுத்துவதிலும் நிகரற்றது.
மெட்டபாலிஸத்தை அதிகரித்து... கொழுப்பை எரிக்கும் ‘சில’ மூலிகைகள்! title=

Herbs for Weight Loss: உடல் எடையைக் குறைப்பதே குறிக்கோள் என்றால், வளர்சிதை மாற்றத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால், உப்பில்லாத சமையலுக்கு ஒப்பானதாகும். ஆம், உங்கள் எடை உங்கள் வளர்சிதை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையது. உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், உங்கள் உடல் எடை வேகமாக குறைகிறது. இது மட்டுமல்லாமல், உங்கள் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உங்கள் செரிமான செயல்முறை சிறப்பாக செயல்படும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாக இருக்கும். மேலும், சிறந்த வளர்சிதை மாற்றத்தின் காரணமாக, சுவாசம் முதல் உணவு செரிமானம் வரை அனைத்திற்கும் உடலுக்குத் தேவையான ஆற்றல் வளர்சிதை மாற்றத்தின் மூலம் சரியாக கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வளர்சிதை மாற்றத்தை வலுவாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு, மேலும் இந்த பொறுப்பை நிறைவேற்ற, நீங்கள் இந்த 6 ஆயுர்வேத மூலிகைகளை உட்கொள்ளலாம்.

அஸ்வகந்தா:

அஸ்வகந்தா பொடியை உணவில் கலந்து சாப்பிட்டால், உடல் எடையை மிக விரைவில் (Weight Loss Tips) குறைக்கலாம். தவிர, அஸ்வகந்தா கஷாயம் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது தவிர, இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் அஸ்வகந்தா நிகரற்றது. இது உங்களுக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. இதுமட்டுமின்றி அஸ்வகந்தா செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது. தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக இதனை உட்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய்:

ஆம்லா என்னும் நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்கும். ஆம்லா சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்படுகிறது, எடை வேகமாக குறைகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதிமதுரம்:

தினமும் அதிமதுரம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். கூடுதலாக, அதன் நுகர்வு மன அழுத்தம் மற்றும் பலவீனமான நினைவாற்றல் போன்ற மனநல பிரச்சனைகளில் இருந்து உங்களை விலக்கி வைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் ‘பயோடின்’ குறைபாடு... உணவில் சேர்க்கவேண்டியவை!

ஜாதிக்காய்:

ஜாதிக்காய் பொதுவாக மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதோடு நல்ல ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும். இது தவிர, இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

சதாவரி:

ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்க சதாவரி என்னும் அஸ்பாரகஸ் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் விட்டான் கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஸ்டெராய்டல் சபோனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் தனிமங்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தும். இதன் பயன்பாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஆண்மை குறைபாடுகளுக்கும் தீர்வைத் தரும்

ஓமம்:

நார்ச்சத்து நிறைந்த ஓமம் எடையைக் குறைப்பதிலும், செரிமான அமைப்பை மேம்படுத்துவதிலும் நிகரற்றது. மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. ஓமம் விதைகளில் உள்ள செயலில் உள்ள நொதிகள் செரிமான செயல்பாடுகளை அதிகரித்து, இரைப்பை சாறுகளை வெளியிட உதவுகிறது.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்ட... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘சூப்பர்’ பானம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News