இருதய நோய் நம்மை மரணத்திற்கே இட்டுச் செல்லக்கூடும். நம்முடைய வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தி வாழ்வதன் மூலம் இருதய நோய் நம்மைத் தாக்காமல் இருக்க வழிவகுக்கலாம். நம்மை இருதய நோயிலிருந்து காத்துக் கொள்ள அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்.
புகைபிடிப்பதல்
சிகரெட்டில் உள்ள புகை கார்பன் மோனாக்ஸைடு ஆகும். இப்புகை இரத்தத்தில் உள்ள பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) வெளியேற்றுகிறது. இரத்தத்தில்ஆக்ஸிஜன் குறைவதை ஈடுகட்ட இருதயம் வேகமாகத் துடிக்க வேண்டியிருக்கிறது.புகை பிடிக்கும் பழக்கமும், கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் பழக்கமும் உள்ள பெண்களுக்கும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் தாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய பாதிப்பு 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
30 நிமிடங்கள் உடற்பயிற்சி
தினமும், முறையாக உடற்பயிற்சி செய்வது இருதய நோயின் ஆபத்தை தவிர்க்கும், உடற்பயிற்சியோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடல் எடையை நிர்வகித்தல் போன்றவை நம் இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். வாரத்திற்கு அதிக நாட்கள் குறைந்தபட்சம் 30-60 நிமிடங்கள் உடல் சார்ந்த பயிற்சிகள், வேலைகள் அவசியம் தேவை, குறைந்த நாட்களே சாத்தியமாயினும், அதற்கான பலனும் கட்டாயம் உண்டு.
உடல் எடையை பாதுகாக்க வேண்டும்
வயது வந்த பெரியவர்களுக்கு பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பது தசைநார்களைவிட கொழுப்பே ஆகும். இந்த அதிக கொழுப்பு எடை இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். மிகக் குறைந்த எடைக் குறைவும் கூட நலம் பயக்கக் கூடியதே. 10 சதவீத எடையைக் குறைப்பது நமது இரத்த அழுத்தத்தை சீர் செய்வதோடு, இரத்தக் கொழுப்பை குறைக்கக் கூடியது. நீரிழிவு நோயிலிருந்தும் பாதுகாக்கக் கூடியது.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் என்பது அறிகுறிகளற்ற நோய். வெளிப்படையாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நோயாளிக்கு தெரிய வரும். ஆனால் அது உயர் இரத்த அழுத்த இருதய நோயை மட்டும் கொண்டுவருவதில்லை. கண் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற வேறு பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.
எனவே ஒவ்வொருவரும் தங்கள் பிரசரை அறிந்து வைத்திருப்பது அவசியம். சாதாரண பிரஷர் என்பது 120/80 mmHg ஆகும். இவ்வாறு சாதாரண அளவில் பிரஷர் உள்ளவர்களும் தங்கள் பிரஷரை குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது அளந்து பார்ப்பது அவசியமாகும். சற்று அதிகம் உள்ளவர்கள் (120/80 – 139/89) தங்கள் பிரஷரை வருடத்திற்கு ஒரு முறையாவது அளந்து பார்க்க வேண்டும். அதைவிட அதிகம் எனில் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை தேவைப்படும்