காலையில் சாப்பிட வேண்டிய 4 ஆரோக்கிய உணவுகள்..!

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த 4 உணவுகளை அன்றாட காலை உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்களை நோய் நொடியில் இருந்து பாதுகாக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2023, 03:46 PM IST
காலையில் சாப்பிட வேண்டிய 4 ஆரோக்கிய உணவுகள்..! title=

நாள் முழுவதும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமெனில், காலை உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலை உணவில் சத்தான பொருட்கள் இருக்க வேண்டும். இது உங்களின் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். சுகாதார நிபுணர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், காலையில் எதைச் சாப்பிட்டாலும் அது  அன்றைய நாளின் முழு வழக்கத்தையும் பாதிக்கும். நீங்கள் காலையில் காரமான ஒன்றை சாப்பிட்டால், வாயு அமிலத்தன்மை உருவாகத் தொடங்குகிறது. காலை உணவை அதிகமாக சாப்பிட்டால் நாள் முழுவதும் வயிறு கனமாக இருக்கும். இதனால் உடல் எடை கூடும் வாய்ப்பும் உள்ளது. மறுபுறம், நீங்கள் எதையும் சாப்பிடவில்லை என்றால், பலவீனம் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை உருவாகும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால் காலை நேரத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான காலை உணவு

போஹா

ஆரோக்கியமான உடலுக்கு, காலை உணவில் போஹாவை உட்கொள்ளலாம். இது சுவையானது மற்றும் வயிற்று செரிமானத்திற்கு சிறந்தது. சுவையாக இருக்க, அதனுடன் வேர்க்கடலை, காய்கறிகள், கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இதனை தினமும் உட்கொள்வதால், உடல் வலிமை அதிகரித்து, எடையும் சீராக இருக்கும்.

மேலும் படிக்க | காலை எழுந்ததும் இந்த தவறுகளை மறந்தும் பண்ணாதீங்க!

உப்புமா

காலை உணவிலும் உப்மா சாப்பிடலாம். இது ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது கால்சியத்தின் நல்ல மூலமாகும். புரோட்டீன் நிறைந்த உளுத்தம் பருப்பும் இதில் சேர்க்கப்படுகிறது, இது மிகவும் சுவையாக இருக்கும். கறிவேப்பிலை, காய்கறிகள், பாசிப்பருப்பு போன்றவையும் உப்மாவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்ட பிறகு வயிற்றில் கனமான உணர்வு இருக்காது.

ஊத்தாப்பம்

ரவை அல்லது உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை அரைத்து உத்தாப்பம் தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க அதிக நேரம் எடுக்காது, மேலும் இது சத்தான பண்புகள் நிறைந்தது. இதை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம். உத்தாப்பம் சாப்பிடுவது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் வாயு-அமிலத்தன்மையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

இட்லி

இட்லி சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்கும். சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். இது அரிசி மாவு, உளுத்தம் பருப்பு அல்லது ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது லேசான காலை உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் ஆபத்துக்கு புதிய மருந்து.! மாரடைப்பு கவலை வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News