சைவ உணவு பிரியரா! கவலை வேண்டாம்; புரோட்டீன் நிறைந்த உணவுகள் இதோ..!!

சைவ உணவு பிரியர்களுக்கு அல்லது அசைவ உணவைக் கைவிட விரும்புபவர்களுக்கும் இறைச்சி உணவுகளை சாப்பிடாமல் முழுமையான புரதம் கிடைக்காது என்ற பொதுவான சந்தேகம் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2022, 08:15 PM IST
  • புரோடீன் உணவில், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இறைச்சி உணவுகளை சாப்பிடாமல் முழுமையான புரதம் கிடைக்காது என்ற சந்தேகம் உள்ளது.
  • புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள தசை திசுக்களை சரிசெய்யும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் .
சைவ உணவு பிரியரா! கவலை வேண்டாம்; புரோட்டீன் நிறைந்த உணவுகள் இதோ..!! title=

சைவ உணவு பிரியர்களுக்கு  (Vegetarian) அல்லது அசைவ உணவைக் கைவிட விரும்புபவர்களுக்கும் ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. அவர்களுக்கு இறைச்சி உணவுகளை சாப்பிடாமல் முழுமையான புரதம் கிடைக்காது என்ற சந்தேகம் உள்ளது. இதற்காக நீங்கள் கவலைக் கொள்ள தேவையில்லை. ஏனெனில்  முழுமையான புரதச் சத்து கொண்ட சைவ உணவுகள் பல உள்ளன. 

புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள தசை திசுக்களை சரிசெய்யும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் . இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு உதவுகிறது என்பதோடு, தொற்றுநோயைத் தடுக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மூளை, கல்லீரல் மற்றும் தசைகள் புரதத்தால் ஆனது. இதிலிருந்து புரத சத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

1. நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகள் புரதத்தின் சிறந்த மூலமாக மட்டுமல்லாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு. ஆனால், உப்பு கலந்த மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற பயன்படுத்தினால் அதன் முழுமையான ஊட்டச்சத்த்தை பெறலாம். 10 பாதாமில் 2.5 கிராம் புரதம் உள்ளதாக கூறப்படுகிறது.

2. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் 

சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச் சிறந்த புரோடீன்  உணவில், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமைக்கப்பட்ட ஒரு கப் உணவில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றில் புரத சத்துடன், நார்ச்சத்தும் உள்ளதால்,  எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேஎலும் இவை வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால், அடிக்கடி பசி உணர்வு ஏற்படாது.

3.பிரோக்கலி 

தாவர அடிப்படையிலான புரதத்தை கொண்ட  பிரோகலியில், உடலுக்கு அவசியமான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் உள்ளது. இவற்றில் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துகளும் அதிகம் இருப்பதால் எப்பொழுதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!

4. ராகி 

புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய சூப்பர் உணவாக விளங்கும் ராகியை உனவில் அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது. இதனை கொண்டு தோசை, இட்லி, ரொட்டி, சத்து மாவு போன்ற வடிவில் சாப்பிடலாம்.  

5. பன்னீர் 

பால் பொருளான பன்னீரில், புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் பன்னீரில் 11 கிராம் புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட பன்னீர் சிறந்த உணவு என்பதால், குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, இது பெரியவர்களுக்கு பிடித்த உணவு என்றால் மிகையாகாது.

6. கீரை

கீரை எளிமையான உணவாக இருந்தாலும் ஊட்டச்சத்து நிறைந்த சிற்ந்த உணவாகும். உங்கள் உணவில் புரதம், கனிமம், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து அதிக வேண்டும் என்றால் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News