இன்றைய கால கட்டத்தில், டயட் குறித்து அதிகம் சிந்திக்கும் போக்கு அதிக உள்ளது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுப்பவர்கள் மத்தியில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. எடை குறைப்பு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலின் இயல்பான வெப்பநிலையை சீராக்குவது போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ மிகவும் பிரபலமானது. ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒருவராக நிச்சயமாக கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம் கிரீன் டீ குடிப்பது என்ற நிலை உள்ளது. ஆனால், இந்த அனைத்து ஆரோக்கிய நன்மைகளை பெற சரியான முறையில், சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். கிரீன் டீயைக் குடிப்பதற்கு எது சரியான நேரம், எந்த அளவில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கிரீன் டீ உடலுக்கு பல நன்மைகலை அளிக்கும் என்றாலும், அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆம், நம்பமுடியாததாக இருந்தாலும், இது உண்மை தான். க்ரீன் டீ குடிப்பது நல்லது. ஆனால் காலையில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். காலையில் க்ரீன் டீ குடிப்பது வயிற்றின் சமநிலையை பாதிக்கும். க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது வயிற்று அமில உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலின் செரிமான அமைப்பை சீர்குலைத்து, வீக்கம், வாயு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கிரீன் டீயை உணவுக்கு இடையில் அல்லது உணவு உண்ட பிறகு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
அதோடு, கிரீன் டீயுடன் சில பிஸ்கட்கள் அல்லது சில சிற்றுண்டிகளை சாப்பிடலாம். ஆனால், அதை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. மேலும், கிரீன் டீ வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதால், அதீத ஆர்வம் காரணமாக நாள் முழுவதும் க்ரீன் டீ குடித்துக்கொண்டே இருக்க கூடாது.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீ குடிப்பது நல்லது. கிரீன் டீயை அதிகமாக குடிக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அதிகப்படியான கிரீன் டீ உண்மையில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அல்லது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கோப்பைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், சாப்பிட்ட உடனேயே க்ரீன் டீயைக் குடிக்காதீர்கள். இது அமிலத்தன்மை, வீக்கம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுக்கு 30-45 நிமிடங்களுக்கு பின் கிரீன் டீ அருந்துவது நல்லது.
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ