கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.?

கோடையில் வரும் தலைவலியால் பலர் அவதிப்படும் நிலையில் அதை கட்டுப்படுத்த தண்ணீர் மட்டும் குடித்தாலே போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 30, 2022, 04:25 PM IST
  • கோடையில் வரும் தலைவலி
  • மருத்துவர்கள் கூறும் அறிவுரை
  • தண்ணீர் மட்டுமே வலி நிவாரணி
கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.? title=

கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வரும் நிலையில் பலருக்கும் தலைவலிதான் பெரிய தலைவலியாக இருக்கும். சாதாரண நாட்களை விட கோடை காலத்தில்தான் தலைவலிபோன்ற பிரச்சனைகலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் தலையில் இருக்கக்கூடிய நரம்புகள் உடல் சூடு காரணமாக விரிவு பெற்று அருகில் உள்ள நரம்புகளை நெருக்கும்போது இந்த தலைவலி வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு ஒரே வழி உடலை குளுர்ச்சியாக வைத்துகொள்வதும், தாராளமாக தண்ணீர் குடிப்பதுமேயாகும்.

உங்களுக்கு தலைவலி வருகிறது என்றால் முதலில் நீங்கள் தேட வேண்டியது வலி நிவாரணியாக உள்ள மாத்திரைகளையோ அல்லது தலைவலி தைலங்களையோ அல்ல... ஒரு டம்ளர் தண்ணீரை முதலில் குடியுங்கள். அது மட்டும் இன்றி வெயில்காலங்களில் அதிகம் தலைவலி ஏற்படக்கூடிய நபர்கள் டீ, காப்பி உள்ளிட்டவைகளை முற்றிலுமாக குறைத்தால் அது மிகவும் சிறந்த பலனை அளிக்கும். இதுபோன்ற பானங்கள் உடலில் உள்ள நீர் சத்தை முற்றிலுமாக குறைத்து தலைவலி ஏற்பட ஊக்கம் அளிக்கும்.

அதேபோல், இரவு நேரங்களில் தூக்கத்தை தவிற்து மொபைல் ஃபோன் பயன்படுத்துவதை தவிருங்கள். நிம்மதியான உறக்கம், சத்தான உணவு, போதுமான அளவு குடிநீர் இதுவே உங்கள் ஆரோக்கியமான வாழ்கையின் மத்திர செயல்களாக இருக்கும். இந்த வெயில் காலத்தில் நீங்கள் வெளியில் செல்வதை முடிந்த வரை தவிற்கலாம். அப்படி செல்ல வேண்டும் என்றால் கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வைத்திருப்பது அவசியம். 

மேலும் படிக்க | இது தெரிஞ்சா வெங்காயத்தோலை தூக்கி எறியமாட்டீங்க: இதுல இருக்கு சூப்பர் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News