முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

Benefits By Applying henna On Hair:  வானிலையில் மாற்றம் ஏற்பட்டவுடன், முடியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், முடி தொடர்பான பிரச்சனைகளில் நீங்களும் போராடிக் கொண்டிருந்தால், உங்கள் தலைமுடிக்கு மருதாணியை தடவலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 18, 2023, 01:35 PM IST
  • மருதாணியை தலைமுடியில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • ​மருதாணியை அப்ளை செய்வது எப்படி?
  • மருதாணி ஒரு இயற்கை முடி சாயமாகும்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க title=

தலைமுடிக்கு மருதாணி பேக் போடறது எப்படி: வானிலையில் ஏற்படும் மற்றத்துடன், முடியில் பல்வேறு பிரச்சனைகள் ஏறபடத் தொடங்கிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முடி தொடர்பான பிரச்சனைகளால் நீங்களும் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே தான் சரியான முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில், 30 வயதிற்கு முன்பே பெரும்பாலானோர் முடி நரைக்கும் பிரச்சனையை சந்திக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலைமுடிக்கு மருதாணியை பயன்படுத்துகிறார்கள். ஆனால், மருதாணி முடிக்கு வண்ணம் பூசுவதைத் தவிர, இன்னும் பல நன்மைகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள், தலைமுடிக்கு மருதாணி பூசுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மருதாணியை தலைமுடியில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தலைமுடிக்கு இயற்கை நிறம் தர உதவும்
மருதாணி ஒரு இயற்கை முடி சாயமாகும், இது முடியை சிவப்பு மற்றும் பிரவுன் நிறமாக மாற்ற உதவுகிறது. இதில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லை என்பதால், இது உங்கள் தலைமுடிக்கு நன்மை பயக்கும். எனவே, உங்கள் தலைமுடி வெண்மையாக மாற ஆரம்பித்திருந்தால், உங்கள் தலைமுடிக்கு மருதாணி பூசலாம்.

மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த கருப்பு உணவுகளை ட்ரை பண்ணுங்கள்

முடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும்
மருதாணியை தலைமுடிக்கு தடவுவது கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு, கூந்தலை மென்மையாக்கும். எனவே, உங்கள் தலைமுடி வறண்டு, உயிரற்றதாக இருந்தால், உங்கள் தலைமுடிக்கு மருதாணியை தடவ வேண்டும்.

முடி வளர்ச்சிக்கு உதவும்
தற்போது, பெரும்பாலான மக்கள் முடி வளர்ச்சி பிரச்சனையால் இன்னல்களை சந்திக்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில், மருதாணி உங்களுக்கு உதவும். ஏனென்றால், மருதாணியில் இயற்கையான கலவைகள் உள்ளன, அவை மயிர்க்கால்களை வலுப்படுத்துவதோடு, அவற்றின் வளர்ச்சி வேகமாகவும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால்தான் ஒரு மாதத்திற்கு 2 முறை மருதாணியை தலைமுடிக்கு தடவவும்.

பொடுகை போக்கு உதவுகிறது
மருதாணியை முடியில் தடவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உங்கள் உச்சந்தலையை அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியில் பொடுகு பிரச்சனையால் நீங்கள் தொந்தரவு ஏற்பட்டால், உங்கள் தலைமுடியில் மருதாணி தடவவும்.

சிறப்பு கவனம்
மருதாணியை நீண்ட நேரம் கலந்து வைக்காதீர்கள்.
பயன்படுத்திய பின் முடியில் எதையும் தடவாதீர்கள்.

​மருதாணியை அப்ளை செய்வது எப்படி?
தலையில் முதலில் வலது புறத்திலிருந்து மருதாணியை பயன்படுத்துங்கள். பிறகு படிப்படியாக முன்நோக்கி பயன்படுத்துங்கள். அதற்கு முன்னதாக கையுறைகளை அணியலாம். அல்லது பிளாஸ்டிக் கவரால் கைகளில் சுற்றியும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பகுதியையும் பிரித்து மருதாணி பயன்படுத்தி சுருட்டியபடி வந்தால் முழு இடங்களிலும் பரவும். இதே போன்று எல்லா இடங்களிலும் நன்றாக மருதாணி பேக் பரப்பி விடவும்.

​மருதாணிபேக் பக்கவிளைவுகள் உண்டாக்குமா?
மருதாணி பாதுகாப்பானதாக சொல்லப்படுகிறது. சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்க செய்யும். மருதாணி உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறதா என்பதை முதலில் பரிசோதனை செய்யுங்கள். மருதாணி பேக்கை முதலில் காதின் பின்பக்கத்தில் சிறிதளவு பயன்படுத்தி பரிசோதனை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News