நீளமான, மென்மையான மற்றும் அழகான கூந்தல் அனைவரின் கனவாகும். கூந்தல் உங்கள் அழகை கூட்டுகிறது. மறுபுறம், உலர்ந்த, உயிரற்ற மற்றும் சேதமடைந்த முடி உங்கள் முழு தோற்றத்தையும் கெடுக்கும். அதே நேரத்தில், மாசுபாடு காரணமாக, முடி தொடர்பான பல பிரச்சனைகளை மக்கள் தற்போதைய சூழலில் சந்திக்க வேண்டியுள்ளது. அதன்படி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்சனைகள் இதில் அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், முடியின் ஒவ்வொரு பிரச்சனையையும் அகற்றுவதற்கு வேரில் இருந்து வலுவாக உருவாக்குவது மிகவும் முக்கியம். உங்கள் தலைமுடியை வலிமையாக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே உள்ளோம், அதை பின்பற்றுவாதம் மூலம் நீங்கள் சிறந்த பலனை பெறுவீர்கள்.
முடியை வலுப்படுத்த, இவற்றைச் செய்யுங்கள்
இரசாயன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
கெமிக்கல் நிறைந்த பொருட்கள் முடியை சேதப்படுத்தும், எனவே முடியை வலுவாக வைத்திருக்க இந்த தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம், மாறாக நீங்கள் மூலிகை பொருட்களை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | ரசாயனம் சேர்க்கப்படாத ஆர்கானிக் கருப்பட்டி
வெதுவெதுப்பான எண்ணெயை கூந்தலில் தடவவும்
உங்கள் தலைமுடி அதிகம் உதிர்ந்தால், நீங்கள் வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்யலாம், இதற்காக நீங்கள் எண்ணெயை லேசாக சூடுப்படுத்திக்கொள்ளலாம். பின் இதை கொண்டு முடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இதன் மூலம், மயிர்க்கால்கள் வலுவடைகின்றன, இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த, எண்ணெயை சூடாக்கி, அதை உங்கள் தலைமுடியில் தடவி, அதன் பிறகு முடிக்கு ஷவர் கேப் போடவும். இப்போது 1 மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும். இது முடியை எப்போதும் வலுவாக வைத்திருக்கும்.
வெப்பத்திலிருந்து முடியைப் பாதுகாக்கவும்
பொதுவாக வெப்பம் முடியை பலவீனமாகவும் உயிரற்றதாகவும் ஆக்குகிறது, எனவே உங்கள் தலைமுடியை வேரில் இருந்து வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் நேராக்க ஹேர் ஐயன், ஹேர் ட்ரையர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஷாம்பு போட்டு முடியை கண்டிஷனிங் செய்யவும்
மழைக்காலத்தில் முடி மிக விரைவாக அழுக்காகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்ய வேண்டும். தொடர்ந்து ஷாம்பு போடுவது உச்சந்தலை மற்றும் முடியில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதற்கு, ஷாம்பூவை முடி மற்றும் உச்சந்தலையில் வட்ட இயக்கத்தில் தடவவும். இதற்குப் பிறகு, கண்டிஷனரை முடியில் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ