Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்

கொய்யா பழம் மட்டுமல்ல, இலைகளிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யா இலைகளை முறையாக எடுத்துக் கொண்டால் அளப்பறிய நன்மைகளை பெறலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2022, 07:52 AM IST
  • கொய்யா இலைகளின் அளப்பறிய ஆரோக்கிய நன்மைகள்.
  • உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • இரைப்பை புண் வராமல் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம் title=

கொய்யா இலைகளின் அளப்பறிய ஆரோக்கிய நன்மைகள்: நாம் வாழும் வாழ்க்கை முறையில், பல உடல்நலப் பிரச்சினைகள் பொதுவான பிரச்சனை ஆகி விட்டது. அதில் ஒன்று உடல் பருமன் பிரச்சனை. ஆனால் கொய்யா இலைகள் இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தரும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

ஆம், கொய்யா இலைகளில் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, பி, கால்சியம், பொட்டாசியம், புரதம் போன்ற பல சத்தான கூறுகள் காணப்படுகின்றன, இது பல பிரச்சனைகளில் இருந்து ஆரோக்கியத்தை காக்கும். அதே சமயம், இதன் இலைகளை உட்கொள்வதன் மூலமும் உடல் பருமன் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். இன்றைய கட்டுரை இந்த தலைப்பில் உள்ளது. கொய்யா இலைகள் உடல் பருமன் பிரச்சனையை எப்படி தீர்க்கும் என்பதை அறியலாம்...

மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!

கொய்யா இலைகளை பயன்படுத்தும் முறை

1. முதலில் கொய்யா இலைகளை நன்றாகக் கழுவவும்.

2. இப்போது இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

3. இப்போது தண்ணீரை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ளவும்.

4. தயாரிக்கப்பட்ட கலவையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் சுரைக்காய்..!!!

கொய்யா இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்

1. கொய்யா இலைகளை உட்கொள்வது இரைப்பை புண் வராமல் தடுக்க மிகவும்  பயனுள்ளதாக இருக்கும்.

2. சர்க்கரை நோயாளிகள், கொய்யா இலையைக் கஷாயம் செய்து குடித்து வந்தால், இந்தப் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3. கொய்யா இலைகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் பயன்படும்.

4. செரிமானத்தை மேம்படுத்த , கொய்யா இலைகளை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

5. ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொய்யா இலைகள் அரிப்பு அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

இருப்பினும், காலாவதியான கொய்யா இலைகளை சாப்பிடக்கூடாது.  இது நன்மைக்கும் பதிலாக, ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே கொய்யா இலைகளை உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News