நரை முடி பிரச்சனை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. பொதுவாக 45 அல்லது 50 வயதிற்கு பிறகு நரை முடி தோன்றுவது சகஜம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்களும் நரை முடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கான முக்கிய காரணம் மன அழுத்தம் என்கின்றனர் வல்லுநர்கள். நரை முடியை போக்க நிறங்கள் அல்லது முடி சாயம் போடுவதெல்லால் ஒரு தற்காலிக தீர்வு தான். வெள்ளை முடி பிரச்சனை தீர, அதன் வேர்களில் இருந்து சிகிச்சை செய்ய வேண்டும், அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும். சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையின் உண்மையான காரணங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவதற்கான காரணங்கள்:
1. 25 முதல் 30 வயதிலேயே, உங்கள் கருமையான முடி வெள்ளையாக மாறினால், அதற்குப் பின்னால் மரபணு பிரச்சனை காரணங்கள் இருக்கலாம்.
2. ஆட்டோ இம்யூன் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சனையால் பல சமயங்களில் முடி ஆரம்பத்திலேயே வெள்ளையாகிவிடும்.
3. தைராய்டு கோளாறு அல்லது வைட்டமின் பி-12 குறைபாடு காரணமாக, சிலரின் தலைமுடி விரைவில் நரைத்துவிடும்.
மேலும் படிக்க | திருமண வாழ்க்கையை குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!
4. பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்று விடுதல் அல்லது அதிக புகைபிடித்தல் போன்ற காரணங்களாலும் நரை முடிபிரச்சனைகள் வருகின்றன.
5. இன்றைய காலகட்டத்தின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களும் தலையில் வெள்ளை முடி தோன்றுவதற்குக் காரணம்.
தலைமுடிக்கு தேவையான வைட்டமின்கள்
தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தோலின் கீழ் காணப்படும் சீபம் என்னும் எண்ணெய்ப் பொருள் உற்பத்திக்கு விட்டமின்கள் மிகவும் அவசியம். வைட்டமின் பி6 மற்றும் பி12 முடியை ஆரோக்கியமாகவும், பட்டுப் போலவும் ஆக்குகிறது, மேலும் இயற்கையாகவே வெள்ளை முடியை கருமையாக்க உதவுகிறது. வைட்டமின் சி ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட், இது முடிக்கு நல்லது.
கருமையான கூந்தலுக்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை
இளமையிலேயே வெள்ளை முடி தோன்று பிரச்சனையை தடுக்க வேண்டுமானால், வைட்டமின்கள் நிறைந்த எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு, அன்னாசி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, கொடைமிளகாய், சோயாபீன், முழு தானியங்கள், முட்டை, அரிசி, ஸ்ட்ராபெரி, கிவி, பால், மீன், சிக்கன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் கூந்தல் கருப்பாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவினியாகும் மாமர இலைகள்; பயன்படுத்தும் முறை இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ