ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பச்சை ஆப்பிள்..!

பச்சை ஆப்பிளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இது ரத்த நாளங்களில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்றும் வல்லமை உடையது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2023, 01:58 PM IST
  • பச்சை ஆப்பிளின் மகத்துவம்
  • கெட்ட கொழுப்பை குறைக்கும்
  • இளமையை பராமரிக்க உதவும்
ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பச்சை ஆப்பிள்..! title=

பச்சை ஆப்பிள் எப்போது சாப்பிடலாம்?

பச்சை நிற  ஆப்பிளில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு பச்சை நிற ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதற்கு உதவும். இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டும். இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.

மேலும் படிக்க | குடல் கழிவுகளை போக்கும் ஜீரணப் பொடி செய்வது எப்படி? இதோ செய்முறை

பசியை குறைக்கும் ஆப்பிள்

இதில் சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை அளவு அதிகம் கிடையாது. எனவே கிரீன் ஆப்பிளை தினசரி சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக நிர்வகிக்க உதவும். கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது வயிறு நிறைந்த தன்மையை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வும் குறையும். பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.

கொழுப்பை தடுக்கிறது

குறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது. கிரீன் ஆப்பிளில் வைட்டமின் சத்துக்கள் மட்டுமல்லாமல் மினரல்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. 

இளமையை பராமரிக்கும்

இந்த சத்துக்கள் சருமத்தை மேருகூட்டுவதொடு மட்டுமல்லாமல் இளமையான சருமத்தை தக்கவைக்கவும் உதவுகிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை வெளியேற்றி பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது. தினமும் ஒரு கிரீன்  ஆப்பிள் உட்கொண்டால், அல்சைமர் என்னும் நினைவாற்றலிழப்பு நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்கலாம்.

மேலும் படிக்க | உடல் சோர்வா? பலவீனமா? அசதியா? அனைத்தையும் போக்கும் ‘இவற்றை’ சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News