கல்லீரல் நமது உடலின் இன்றியமையாத பகுதியாகும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் உணவு செரிமானம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், நச்சுக்களை வெளியேற்றுதல் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, கல்லீரலின் உதவியுடன், கொழுப்பு குறைக்கப்பட்டு, கார்போஹைட்ரேட் சேமிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடல் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி. கல்லீரலுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஒரு உனவைப் பற்றி இந்தியாவின் பிரபல சுகாதார நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்திய நெல்லிக்காய் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இது கொழுப்பு கல்லீரலுக்கு எதிராகவும் போராடுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அம்லாவில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது, எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போது பல வகையான நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளவர்களுக்கு ஆம்லா என்னும் நெல்லிகாய் ஒரு சஞ்சீவினியைப் போன்றது.
நெல்லிக்காயானது நம் உடலுக்கு ஒரு சூப்பர்ஃபுட் ஆகும், இது நீரிழிவு, அஜீரணம், கண் பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பலவீனத்தை எதிர்த்துப் போராடுகிறது. மூளையை பலப்படுத்துவதோடு, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. இதனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும். கல்லீரலைப் பொறுத்த வரையில், நெல்லிக்காய் வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நன்மை பயக்கும். இந்த மாயாஜாலப் பழத்தின் மூலம்தான் உடலில் உள்ள ஹைப்பர்லிபிடெமியா மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்றவையும் குறைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
நெல்லிக்காயை உட்கொள்ளும் முறை
இந்திய நெல்லிக்காயை சாப்பிட பல வழிகள் உள்ளன, மிக எளிமையானது, இதை நேரடியாக மென்று சாப்பிடலாம், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம். இது தவிர, காலையில் எழுந்தவுடன் நெல்லிக்காய் ஜூஸ் கண்டிப்பாக அருந்த வேண்டும். இதைச் செய்து வந்தால் இதன் பலன் சில நாட்களில் உணரப்படும்.
நெல்லிகாய் ஜூஸ் தயாரிக்கும் முறை
நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும். மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு, கூடவே இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும். அந்த ஜூஸை மோர் கலந்தும் அருந்தலாம். நெல்லிக்காய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து கோரில் கலந்து, உப்பு சேர்த்தும் குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ