தங்கத் தேனை பயன்படுத்தியது உண்டா? தங்கமாய் ஜொலிக்க கோல்டன் ஹனி

Golden Honey: கோல்டன் ஹனி என்று அழைக்கப்படும் இந்த தங்கத் தேன், தேனில் உள்ள ஆரோக்கிய பண்புகளுடன் சேர்த்து, வேறு பல நன்மைகளையும் அதிகரித்து வழங்குகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 21, 2022, 11:16 AM IST
  • மஞ்சளும் தேனும் சேர்ந்தால் கிடைக்கும் தங்கத் தேன்
  • தங்கத் தேன் பயன்கள்
  • தோல்களை பளபளப்பாக்கும் மஞ்சள் கலந்த தேன் கலவை
தங்கத் தேனை பயன்படுத்தியது உண்டா? தங்கமாய் ஜொலிக்க கோல்டன் ஹனி title=

ஆரோக்கியத்துக்கான தேன்: தேனுடன் மஞ்சள் சேர்த்தால் அது தங்க நிறமாக இருப்பதால் தங்கத் தேன் என்று அழைக்கப்படுகிறது. கோல்டன் ஹனி என்று அழைக்கப்படும் இந்த தங்கத் தேன், தேனில் உள்ள ஆரோக்கிய பண்புகளுடன் சேர்த்து, வேறு பல நன்மைகளையும் அதிகரித்து வழங்குகிறது. மஞ்சள் தேன் என்றும் அழைக்கப்படும் கோல்டன் தேன் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்க ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பிற இயற்கை வைத்தியங்களில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமான தேனை விட இது எப்படி சிறந்தது?

தங்கத் தேன்
சுத்தமான தேனுக்கும் தங்கத் தேனுக்கும் உள்ள வித்தியாசம் சர்க்கரை உள்ளடக்கம் தான். இருப்பினும், தங்கத் தேன் ஒரு மாற்று இனிப்பானாகப் பயன்படுத்தப்படுவது மட்டும் அல்ல. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்

கோல்டன் தேனின் ஆரோக்கிய நன்மைகள்:
செரிமானத்திற்கு உதவும் கோல்டன் ஹனி: ஏதேனும் செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், தங்க தேன் சாப்பிடுவது சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தங்கத் தேனைச் சேர்த்துப் பருகுவதன் மூலம் வாயு, வீக்கம் அல்லது வயிற்றுப் பிடிப்புகள் நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்து தேன் சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

கோல்டன் தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன,  உடலில் கடுமையான வலி மற்றும் அல்லது பிற வகையான அழற்சியைக் குறைக்க உதவும். தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் கலந்த தேனை எடுத்துக்கொள்வது உடலில் வலிகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

மேலும் படிக்க | Honey For Skin: முகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேன்
 
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

வழக்கமான தேனில் இருப்பதைவிட கோல்டன் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன.  உடலில் உள்ள தொற்று மற்றும் பாக்டீரியாவையும் அழிக்கும் திறன் கொண்டது மஞ்சள் கலந்தத் தேன். எரிச்சலைத் தணிக்கவும், சளி மற்றும் இருமலைப் போக்கவும் உதவுகிறது.

கோல்டன் தேன் சிறந்ததா? அல்லது சாதாரண தேன் சிறந்ததா?
ஆய்வுகளின்படி, வெறும் தேனாக இருந்தாலும் சரி, மஞ்சள் கலந்த தேனாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆரோக்கிய பண்புகளின் அடிப்படையில் சிறந்தவை. கோல்டன் தேனில் மஞ்சள் சேர்ந்திருப்பதால், தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, வலியைக் குறைக்கிறது, வீக்கம் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

மறுபுறம், சாதாரண தேநீர் மற்றும் காபியில் சர்க்கரை சேர்ப்பதற்கு சாதாரண தேன் ஒரு சிறந்த மாற்றாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News