Fruits for Beauty: பருக்கள் எல்லாம் எனக்கு ஜுஜுபி: சவால் விடும் நாகப்பழம்

சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் நாவற்பழம் மலச்சிக்கலையும் போக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2022, 01:59 PM IST
  • ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் அணி சேர்க்கும் நாவல் பழம்
  • நாகப்பழத்தின் நன்மைகள்
  • இது பழமா இல்லை பரிசா
Fruits for Beauty: பருக்கள் எல்லாம் எனக்கு ஜுஜுபி: சவால் விடும் நாகப்பழம் title=

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் உதவும். சில பழங்களை சாப்பிடுவதால், சருமம் சுத்தமாகும், பருக்கள் நீங்கும்.

அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் நாகப்பழம் என்று அழைக்கப்படும் நாவல் பழம். இந்தப் பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பதோடு, நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. 

சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் நாவற்பழம் மலச்சிக்கலையும் போக்கும். உடலில் படிந்துள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மையும் நாவல் பழத்துக்கு உண்டு.

நாகப்பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, சோடியம் மற்றும் பல பண்புகள் உள்ளன. சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கவும் நாவல் பழம் மிகவும் பலனளிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.  
பருக்கள் நீங்கும்.

மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்

அழகைக் கொடுக்கும் நாவற்பழமானது, அழகைக் கெடுக்கும் முகப் பருக்களை போக்குகிறது. குறிப்பாக கோடையில் முகம் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த பிரச்சனைகளை மருந்தின்றி ஆரோக்கியமான வகையில் எதிர்கொள்ள பயன்படுகிறது நாகப்பழம்.

நாகப்பழத்தின் சாறு அல்லது அதன் இலைகளின் சாற்றை சருமத்தில் சருமம் மாசு மருவற்று முற்றிலும் சுத்தமாகும். நாகப்பழத்தை சருமத்தில் தடவுவதால் தோலிலுள்ள எண்ணெய் சுரக்கும் தன்மை குறையும். நாகப்பழத்தின் சாறு சருமத்தின் உட்புறத்திலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | வெப்பத்தை அதிகரித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அற்புத மூலிகைகள்

கண்களுக்கு நன்மை 
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு போன்ற பிரச்சனைகளால் கண் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், கண்களில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளைத் தவிர்க்க நாவற்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். 

நாகப்பழத்தின் இலைகளை கசாயமாக குடிப்பதும் நல்ல பலன்களைத் தரும். நாகப்பழத்தின் கசாயத்தைக் கொண்டு முகம் கழுவினால், சருமப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

15-20 இளம் நாவல் இலைகளை தண்ணீரில் கொதிக்க விட்டு, அது பாதியாக சுண்டிய பிறகு பயன்படுத்தலாம். நாகப்பழ கசாயத்தை குளிர்வித்து பயன்படுத்த வேண்டும். 

மேலும் படிக்க | கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க சூப்பர் வழி இதுதான்

பல்வலியை போக்கும் நாகப்பழம்
பற்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க நாகப்பழத்தை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.  

நீரிழிவுவும் நாகப்பழமும்
நிரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழம் நாவல். இதில் ஆண்டிடியாபெடிக் பண்புகள் நிறைந்திருப்பதால், சர்க்கரை அளவை 30 சதவீதம் வரை குறைக்கும். இதனை உட்கொள்வது சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.

 சர்க்கரையை ஸ்டார்ச் ஆக மாற்றும் விகிதத்தை நாகப்பழம் குறைக்கிறது. உணவுக்குப் பிறகு திடீரென குளுக்கோஸ் அதிகரிப்பதைத் தடுக்க நாகப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News