கொரோனா முதல் இரண்டு அலைகளை சிறப்பாகக் கையாண்ட கேரளா அரசு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது பதிவான வைரஸ் பாதிப்புகளில் சுமார் 60% கேரள மாநிலத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று, 2ஆம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.
தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது. கேரளாவில் கூடுதலாகத் தளர்வுகளை அறிவித்தால், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்த போதிலும், பக்ரீத் பண்டிகைக்குக் கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த இந்திய மருத்துவர்கள் சங்கம், தளர்வுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கைக் கேரளா அறிவித்தது.
ALSO READ மதுக்கடைகளில் இனி கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்!!
கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே நேற்று ஒரே நாளில் 31,445 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.
தற்போது கொரோனா எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் ஒட்டி கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe