கொலஸ்ட்ராலை வேகமாகக் குறைப்பது எப்படி: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். கொலஸ்ட்ரால் மெழுகு போன்றது மற்றும் இரத்த நாளங்களை iஇது அடைக்கிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் இருந்தால், இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். மருத்துவர்களின் கூற்றுப்படி, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கொலஸ்ட்ரால் தான் பெரிய காரணம் என்கின்றனர். கொலஸ்ட்ரால் நரம்புகளை அடைத்து இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் கொலஸ்ட்ராலைப் பற்றி விழிப்புடன் இருக்கத் தொடங்கியுள்ளனர் மற்றும் அதைக் குறைப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். அதிக கொழுப்புள்ள உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கின்றது. அதன்படி கொலஸ்ட்ராலைக் குறைக்க உணவுமுறை மாற்றங்கள் செய்வது மிகவும் அவசியமாகும். இதனுடன், உடற்பயிற்சியையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் எல்டிஎல் கொழுப்பின் அளவு டெசிலிட்டருக்கு 70 மில்லிகிராம் (mg/dl)க்குக் கீழே இருக்க வேண்டும். மேலும் HDL கொழுப்பு 40 mg/dl க்கு மேல் இருந்தால், பெருந்தமனி தடிப்பு, இதய நோய் மற்றும் மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும்.
மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
பொதுவாக நம் உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க 5 வகையான மருந்துகள் இருப்பதாக ஹார்வர்ட் ஹெல்த் சமீபத்தில் தெரிவித்தது. எல்டிஎல் கொழுப்பை அகற்ற ஸ்டேடின் மருந்து பயனுள்ளதாக இருக்கும். இதன் 10 மாத்திரைகளின் தோராயமான விலை ரூ.24 ஆகும். இதனை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றலாம்.என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிக கொலஸ்டராலின் முக்கியமான ஐந்து அறிகுறிகள்:
1) கால்கள், கைகள் போன்றவற்றில் உணர்வில்லாமல் போவது.
2) வெளிறிய நகங்கள்.
3) தோலில் ஊதா நிற வலை போன்ற அமைப்பு ஏற்படுவது.
4) சாந்தெலஸ்மா தோன்றுதல் அதாவது கண் இமைகளின் மூலைகளில் தோன்றும் மஞ்சள் நிற வளர்ச்சி.
5) சொரியாசிஸ்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ