Foods for Hypertension: உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவும் உணவுகள்

உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா?  புரதத்தை உள்ளடக்கிய உணவு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 12, 2022, 09:35 AM IST
  • உயர் இரத்த அழுத்தத்திற்கான உணவுகள்
  • உயர் இரத்த அழுத்தத்திற்கும் உணவுமுறைக்கும் உள்ள தொடர்பு
  • உயர் ரத்த அழுத்தத்தை சமாளிக்க வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் அவசியம்
Foods for Hypertension: உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவும் உணவுகள் title=

புதுடெல்லி: உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா?  புரதத்தை உள்ளடக்கிய உணவு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமா?
உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினமாக உள்ளதா? உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சனுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் நிலைமையைச் சமாளிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பல்வேறு மூலங்களிலிருந்து புரதத்தை உள்ளடக்கிய உணவு, உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

உயர் இரத்த அழுத்தம் இருதய நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். சிகிச்சையளிக்கப்படாமல் விடப்பட்டால், உயர் இரத்த அழுத்தம் இரத்த ஓட்ட அமைப்பை சேதப்படுத்துகிறது. அது, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற சுகாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | சிறுநீரகத்தை பாதிக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்

Hypertension மருத்துவ சஞ்சிகையில் சமீபத்திய வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், முழு தானியங்கள், முளை கட்டிய தானியங்கள், பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சி, கோழி, மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள் உட்பட நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட புரத உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பாதிப்பது குறைவு என்று கூறப்பட்டுள்ளது.  

health

மோசமான உணவுத் தரம் மற்றும் இருதய நோய் மற்றும் இருதய நோயால் ஏற்படும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது.

மேலும் படிக்க | இந்த 4 உணவுகளைத் தவிர்த்தால் ஆரோக்கியமான கூந்தல் நிச்சயம்

கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான உணவு வழிகாட்டுதலில், தாவரங்களிலிருந்து புரதத்தின் ஆரோக்கியமான மூலங்களை உண்ணுமாறு  அறிவுறுத்தப்படுகிறது,

கடல் உணவுகள் மற்றும் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் பொருட்கள்,இறைச்சி அல்லது பதப்படுத்தப்படாத கோழி இறைச்சியை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு புரத உணவுகள்
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க எந்த புரத உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கலாம்  தினசரி உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகள் இங்கே உள்ளன: மீன், தோல் இல்லாத கோழி மற்றும் சோயா பொருட்கள் சிறந்த புரத ஆதாரங்கள் ஆகும்.

மேலும் படிக்க | சிறுநீரக நோய் உங்கள் கண்களை பாதிக்கலாம், எப்படி தடுப்பது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News