அளவிற்கு மிஞ்சிய சீரகம் கல்லீரலை பாதிக்கும்; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2022, 12:49 PM IST
  • சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • சீரகம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இன்றியமையாத ஒரு மசாலா பொருள்.
  • கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கும் ஆபத்து.
அளவிற்கு மிஞ்சிய சீரகம் கல்லீரலை பாதிக்கும்; எச்சரிக்கும் நிபுணர்கள்! title=

சீரகம் இந்திய சமையலறையில் இருக்கும் இன்றியமையாத ஒரு மசாலா பொருள். உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சீரகத்தை உணவில் சேர்ப்பதால், செரிமான சக்தி மிகவும் அதிகரிக்கிறது. ஆனால், அளவிற்கு அதிகமான அளவில் சீரக எடுத்துக் கொள்வது பல தீங்குகளையும் விளைவிக்கும். எனவே, சீரகத்தை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. அதிக அளவில் சீரகத்தை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

சீரகத்தை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். எனவே சீரகத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். நீண்ட நாட்கள் அளவிற்கு அதிகமாக, சீரகத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

எரிச்சல் உணர்வு

சீரகத்தை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் காரணமாக, மார்பில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மேலும், சீரகத்தை அதிகமாக உட்கொள்வது ஏப்பம் விடுவதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏப்பம் விடுவதன் மூலம், உங்கள் குடல் மற்றும் வயிற்றில் சேமிக்கப்பட்ட வாயு வெளியேறுகிறது என்றாலும், அடிக்கடி வரும் ஏப்பம், உங்களுக்கு தர்ம சங்கடங்களையும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கருச்சிதைவு ஏற்படும் அபாயம்

கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். எனவே அந்த சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை அளவு 

அதிக அளவு சீரகத்தை உட்கொள்வதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் குறைவான அளவு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, மேலே கூறியுள்ள விஷயங்களை கருத்தில் கொண்டு, சீரகத்தை அளவோடு உட்கொள்ளுங்கள். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப, ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது. 

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News