பகீர் தகவல்! அளவுக்கு அதிகமான ‘ஆண்டிபாயாடிக்' உங்கள் வாழ்க்கையை முடக்கி விடலாம்!

சளி, காய்ச்சல் மற்றும் இருமலுக்கு ஆண்டிபயாடிக்குகள் சஞ்சீவியாக இருந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 21, 2022, 10:16 AM IST
  • ஆண்டிபாயாடிக்குகளை கவனமாக சாப்பிடுங்கள்.
  • ஆரோக்கியத்திற்கு பெரிய கேடு ஏற்படலாம்.
  • மருத்துவரை அணுகி ஆலோசிப்பது மிகவும் முக்கியம்.
பகீர் தகவல்! அளவுக்கு அதிகமான ‘ஆண்டிபாயாடிக்' உங்கள் வாழ்க்கையை முடக்கி விடலாம்! title=

புதுடெல்லி: தற்போதைய காலகட்டத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மிகவும் கவனக் குறைவாக,  எடுத்துக் கொள்ளும் பலரை பார்க்கலாம். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையின்றி ஆண்டிபயாடிக்குகளை உபயோகிப்பது மிகவும் ஆபத்து. சமீபத்தில், நடைபெற்ற ஒரு சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.

வாழ்க்கையை அழித்த ஆண்டிபயாடிக்

அலெக்ஸ் மிடில்டன் என்ற நபர் அளவுக்கு அதிகமான ஆண்டிபயாடிக் மருந்தை உட்கொண்டதன் காரணமாக வரது உடல்நிலை மிகவும் மோசமானது. இன்றைக்கு யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. உடல் எடை மிக வேகமாக குறையத் தொடங்கியது.

மேலும் படிக்க | Garlic for Health: இதயம் முதல் பாலியல் ஆரோக்கியம் வரை அருமருந்தாகும் பூண்டு..!!

அதிக அளவு ஆண்டிபயாடிக்குகள் ஆபத்தானவை

26 வயதான அலெக்ஸ் மிடில்டனுக்கு ஆபத்தான தொற்று ஏற்பட்ட நிலையில், மருத்துவர் அவருக்கு  ஆண்டி பாடிக்கை வழங்கினார். அலெக்ஸ் ஏற்கனவே மருத்துவரை ஆலோசிக்காமல் ஆண்டி பயாடிக்குகள் எடுத்து வந்த நிலையில், மருத்துவர் கொடுத்த ஆண்டிபயாடிக்கும் சாப்பிடத் தொடங்கினார். அத்னாஅல்,  2 நாட்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் தோன்றத் தொடங்கின. முன்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்த அலெக்ஸ் இப்போது நடக்கக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு மூட்டு வலியும் தொடங்கியது.
 

அலெக்ஸ் மிடில்டன் (புகைப்படம்: Grimsby Telegraph/MEN Media)

வலியில் கழியும் வாழ்க்கை

அலெக்ஸ் மிடில்டனின் தாய் மிச்செல் இது குறித்து கூறுகையில், தனது மகன் எப்போதும் வலியால் அவதிப்படுகிறான். ஆனால் அவனால் வலி நிவாரணிகளை உட்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், மருந்தினால் ஏற்படும் பகக் விளைவுகள் வேறொரு பிரச்சனை வருகிறது என வேதனையுடன் கூறினார்.  ஆண்டிபயாடிக்குகளை உட்கொண்ட பிறகு அலெக்ஸின் எடையும் வேகமாகக் குறையத் தொடங்கியது என்றும் மிச்செல் கூறினார்.

அலெக்ஸ் குணமடைய பிரார்த்தனை

MRI ஸ்கேன் மூலம், அலெக்ஸின் உடலில் அசாதாரணமாக பெரிய செலியாக் தமனி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதற்கான பரிசோதனையும் நடந்து வருகிறது. ஆனால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வழி இன்னும் தெரியவில்லை. அலெக்ஸின் தாய் தன் மகன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார். 

மேலும் படிக்க | கண்களைச் சுற்றி வீக்கம் உள்ளதா; ‘இந்த’ தீவிர நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News