Health Alert: உடல் எடையை குறைக்க உப்பைக் குறைத்தால் வரும் பிரச்சனைகள் இவை

Effects Of Low Salt: உப்பு குறைந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம். ஆனால் உப்பிடாமல் உண்பவரை?

Last Updated : Mar 7, 2023, 08:35 PM IST
  • உப்பு குறைந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
  • உடலில் உப்பு குறைவதன் அறிகுறிகள்
  • உடல் எடையை குறைக்க உப்பு குறைத்தால் மட்டும் போதுமா?
Health Alert: உடல் எடையை குறைக்க உப்பைக் குறைத்தால் வரும் பிரச்சனைகள் இவை title=

உணவில் சேர்க்கும் உப்பு நமக்கு சக்தியையும் தருகிறது, நோயையும் தருகிறது. இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முதல் உடல் பருமன் ஆனாவர்கள் என பலர் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, பெரும்பாலான மக்கள் உண்ணும் உப்பின் அளவு குறித்து கவனம் செலுத்துகிறார்கள். உப்பு குறைத்து சாப்பிடுவதால், உடலில் என்ன விளைவு ஏற்படும் என்பது தெரியுமா?

உணவில் உப்பை குறைத்த பிறகு உடலில் தெரியும் மாற்றங்கள்

உணவில் உப்பைக் குறைத்தால், அதன் எதிரொலி உடல் ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும். அந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். இது குறித்த விழிப்புணர்வு இருந்தால், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எலக்ட்ரோலைட் சத்து

உப்பு நம் ஆரோக்கியத்திற்கு மோசமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உப்பில் ஒரு முக்கியமான எலக்ட்ரோலைட் உள்ளது, இது நம் உடல் சாதாரணமாக செயல்பட உதவுகிறது. அதனால்தான் உப்பை உணவில் இருந்து முழுமையாக விலக்காதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும் உணவுகள் இவை தான்..! தினசரி சாப்பிடுங்கள்

எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது.  இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதில் உப்பு இல்லாமலும் குடிக்கலாம். எலுமிச்சை பழம் மட்டுமே போதுமானது.

சிறுநீரகத்தில் பிரச்சனை.
உங்கள் உணவில் இருந்து உப்பை விலக்கினால், அல்லது மிகவும் குறைந்த அளவு எடுத்துக் கொண்டால், அதன் விளைவு சிறுநீரகத்திலும் எதிரொலிக்கும்.. இது இரத்த அழுத்தத்தில் மட்டுமல்ல, உடலில் சேரும் சோடியத்தின் அளவையும் நேரடியாகப் பாதிக்கிறது.அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உப்பு உட்கொள்ளவில்லை என்றால், பிரச்சனை இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள்.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் பண்ண திட்டமா? அப்போ இந்த பச்சை நிற ஜூஸ் போதும்

எடை குறைவு
நீங்கள் உப்பு சாப்பிடுவதை நிறுத்தினால், உடனடியாக உங்கள் எடை சில கிலோக்கள் குறையும். ஒருவேளை அது தண்ணீரின் எடையைக் குறைக்கிறது. ஏனென்றால், நீங்கள் சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கும்போது, ​​​​உங்கள் எடை குறைகிறது என்று மகிழ்ச்சியடைவதோடு, உடலில் உள்ள சோடியம் அளவை பராமரிப்பதை அலட்சியப்படுத்தாதீர்கள். 

உப்பு சாப்பிடுவதை நிறுத்தி உடல் எடையை குறைப்பவர்கள், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கணுமா? இதை சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News