இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை சர்க்கரையைப் போலவே யூரிக் அமில பிரச்சனையும், ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. யூரிக் அமில அளவு உடலில் அதிகரித்தால், வலி, வீக்கம் மற்றும் மூட்டுகளில் விறைப்பு போன்ற பிரச்சனைகள் தலைதூக்குவதோடு, உடலில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. யூரிக் அமிலம் காரணமாக சிறுநீரகத்திலும் அழுத்தம் ஏற்படுகிறது. யூரிக் அமில பிரச்சனை கணு கொள்ளமால் விட்டால் எலும்புகள் மட்டுமின்றி, சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளும் பாதிக்கும்.
நாம் அதிகப்படியாக உட்கொள்ளும் புரதம் சரியாக செரிமானம் ஆகாவிட்டால், அது பியூரின் வடிவத்தை எடுக்கும். பியூரின்கள் அளவிற்கு அதிகமானால், சிறுநீரகத்திம்னால், அதனை வடிகட்ட முடியாமல் போவதன் காரணமாக உடலில் யூரிக் அமில அளவு அதிகமாகிறது. இந்த படிகங்கள், இரத்தத்துடன் கலந்து, எலும்புகளின் மூட்டுகளில் உள்ள இடைவெளியில் குவிந்து, கடும் வலியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், யூரிக் அமிலத்தை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் அத்தகைய ஆற்றல் கொண்ட இலைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
யூரிக் அமில அளவைக் குறைக்கும் வெற்றிலை
வெற்றிலைகள் பல நோய்களுக்கு மர்நுதாக உள்ளது. யூரிக் அமில அளவைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லலாம். அல்லது சாறு எடுத்து அருந்தலாம். வெற்றிலைச் சாற்றினை எலிகளுக்கு கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனயில், யூரிக் அமிலத்தின் அளவு சிறப்பாக கட்டுக்குள் வந்துள்ளது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் துளசி இலைகள்
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆயுர்வேத சிகிச்சையில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும், துளசி இலைகளை உட்கொள்வதால் உடலில் சேரும் அழுக்குகள் மற்றும் கழிவுப்பொருட்கள் நீங்கும். துளசி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்தத்தில் சென்று யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் அதிக யூரிக் அமிலத்தை வெளியேற்றும் வகையில் சிறுநீரகத்தின் திறனை அதிகரிக்கிறது.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி இலைகள்
நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ள கொத்தமல்லி இலைகள் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. யூரிக் அமிலம் குறைய, கொத்தமல்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். அல்லது கொத்தமல்லியை பிற காயக்றியுடன் சேர்த்து ஜூஸாக தயாரித்து குடிக்கலாம்
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் வேப்பிலை
ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பண்புகள் நிறைந்த வேப்பிலை நச்சு நீக்கும் தன்மை கொண்டது. இது இரத்தத்தில் காணப்படும் யூரிக் அமைலத்தை மட்டுமல்ல பிற நச்சுப் பொருட்களையும் அகற்றுகிறது சிறுநீரகத்தின் சக்தியை அதிகரிக்கவும் வேப்பிலை உதவுகிறது. இதனை கஷாயமாக தயாரித்து குடிக்கலாம். அல்லது மென்று சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ