டீயை விடவும் காபி பலருக்கும் பிடித்தமான மற்றும் உடனடியாக புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு எளிமையான முறையில் தயாரிக்கக்கூடிய பானமாகும். அதேசமயம் இந்த பானத்திற்கு பலரும் அடிமையாகி உள்ளனர். போதை பழக்கத்தில் உள்ளவர்கள் எப்படி போதைப்பொருள் இல்லையென்றால் சிரமப்படுவார்களோ அப்படிதான் காபி அருந்துபவர்களும் காபி இல்லையென்றால் வருத்தப்படுவார்கள். காபியில் உள்ள காஃபைன் நம்மை அடிமைப்படுத்துகிறது, மேலும் இது நமக்கு சுறுசுறுப்பை தருகிறது. இருப்பினும், சில உயர் இரத்த குளுக்கோஸ் அளவு அறிகுறிகளை அதிகப்படுத்தும் திறன் காரணமாக காபியின் இந்த நன்மை விளைவுகள் குறைவாகவே அறியப்படுகின்றன. காபி குடிப்பது ஆற்றலை தருகிறது என்றாலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி காபி குடிப்பது சிறுநீரக பிரச்சனை போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, காஃபின் அதிகம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கா? இந்த அறிகுறி கால்களில் தென்படும்
காபி ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. காபியில் நிறைய வகைகள் உள்ளது, பிளாக் காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் நீரிழிவு நோய் அதிகம் ஏற்படாது ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு கூட பிளாக் காபி குடிக்கலாம். அதேபோல சர்க்கரை சேர்க்காமல் குடிக்கும் எஸ்ப்ரெஸ்ஸோ காபி வகையும் சர்க்கரை நோய் அபாயத்தை ஏற்படுத்தாது. கேப்புசினோவில் அதிக கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தவிர்க்கலாம். பிரபலமாக இருக்கும் ஃப்ராப்புசினோ வகை காபி ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரியவர்கள் ஏறத்தாழ 400 மி.கி காஃபின் அதாவது 4 அல்லது 5 கப் பருகலாம், நீரிழிவு நோயாளிகள் காபி அருந்தும் அளவை குறைத்து கொள்வது நல்லது.
காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்கிறது. அதேசமயம் காஃபின் ஒருவரின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது. இது திரவமாக இருப்பதால் உடலில் நீண்ட நேரம் தங்காமல் சிறுநீர் மூலம் வெளியேறிவிடுகிறது. சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட காபியை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். காபியில் சர்க்கரை அல்லது பிற இனிப்புகளை சேர்த்தால் உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவில் மாற்றம் ஏற்படும். காபி குடிக்கும் அனைவருக்கும் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறவில்லை, அது ஒவ்வொருவரின் உடலை பொறுத்தது. தினமும் குறிப்பிட்ட அளவு காபி அதுவும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வெந்நீர் உதவாதா? அதிர்ச்சியூட்டும் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ