வழுக்கைப் பிரச்சனைக்கு காரணம் தெரிஞ்சிடுச்சு! சிக்கலை தீர்த்துட்டா, நோ வழுக்கை பாஸ்

Baldness Reason And Remedy: தலை வழுக்கை என்பது ஆண், பெண் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஆண்களை அதிகம் பாதிக்கிறது வழுக்கைப் பிரச்சனை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2023, 09:23 PM IST
  • இந்த நோய் இருந்தா தலை வழுக்கையாகிவிடும்!
  • ஆண் பெண் என யாருக்கு வேண்டுமானாலும் தலையில் வழுக்கை விழலாம்,
  • ஆண்களை அதிகம் பாதிக்கும் வழுக்கைப் பிரச்சனை
வழுக்கைப் பிரச்சனைக்கு காரணம் தெரிஞ்சிடுச்சு! சிக்கலை தீர்த்துட்டா, நோ வழுக்கை பாஸ் title=

புது டெல்லி: தலைமுடி பிரச்சனையே இன்று ‘தலை’யாய பிரச்சினையாக பலருக்கு இருக்கிறது. இளநரை, முடி கொட்டுதல், வழுக்கை, முடி அடர்த்தி இல்லை என தலைமுடி தொடர்பான கவலை இல்லாத வீடே இல்லை என்று சொல்லிவிடலாம். இளநரையா? இல்லை வழுக்கையா? எங்ககிட்ட வாங்க 30 நாளில் சரி செய்துவிடுகிறோம்: என கூவிக்கூவி விளம்பரங்கள் அழைத்தால், நப்பாசையில் அங்கு சென்று பணத்தை தொலைத்து வருபவர்களின் கதைகள் சோகக்கதைகள் தான்.

உண்மையில் தலைமுடிப் பராமரிப்புக்காக நாம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. இதற்கு முன்பெல்லாம், மிகவும் வயதனவர்களுக்கு இருந்த வழுக்கை பிரச்சனையானது, இள வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

இந்த பிரச்சனையை தீர்ப்பது ஒரு புறம் என்றால், இடியாப்ப முடி சிக்கலின் ஆணி வேரை அறிந்தக் கொண்டால், முடி வேரோடு அற்றுப்போவதை தவிர்க்கலாம்.

முடியின் வளர்ச்சி

முடி என்பது ஒரு புரத இழை ஆகும், இது கரோட்டின் என்னும் புரதத்தால் ஆனது. ஒரு மனிதரின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன என்பதும், தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது சாதாரணமான விஷயம் என்பதும் தெரியுமா?

உங்கள் தலையில் முடி குறைவாக இருந்தால், அது பால்கோரா புழுவின் காரணமாக இருக்கலாம். தலைமுடிக்கு புழு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பால்கோரா என்றும் அழைக்கப்படுகிறது. சிலரின் கூற்றுப்படி, பால்கோரா புழு மெதுவாக முடியை உண்ணத் தொடங்குகிறது. ஆனால் அறிவியல் இதை உறுதி செய்கிறதா?

மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? வீட்டில் செய்யக்கூடிய இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!

உண்மை என்ன?
உண்மையில், அலோபீசியா அரேட்டா என்னும் நோய் தான் வழுக்கைப் பிரச்சனைக்கு காரணம், இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும். இதில் நோயெதிர்ப்பு அமைப்பு, தலைமுடியை தாக்குகிறது. இதன் காரணமாக அடிக்கடி எதிர்பாராத முடி உதிர்வு தொடங்குகிறது.  உலகளவில் 147 மில்லியன் மக்கள் அலோபீசியா அரேட்டா (alopecia areata) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

அலோபீசியா அரேட்டா உச்சந்தலையின் பெரும்பகுதியை பாதிக்கலாம். தலையில் முழு முடி உதிர்வு ஏற்பட்டால், மருத்துவர்கள் அதை அலோபீசியா டோட்டலிஸ் என்று கருதுகின்றனர். ஆனால் முழு உடலிலிருந்தும் முடி உதிர்ந்தால், இந்த நிலை அலோபீசியா யுனிவர்சலிஸ் என்று அழைக்கப்படுகிறது.

அலோபீசியா வயது, பாலினம் என்பதையும் தாண்டி, அனைவரையும் யாரையும் பாதிக்கலாம். ஆனால், பொதுவாக 30 வயது என்ற சமயத்தில் இந்த பிரச்சனை உருவாகத் தொடங்குகிறது. 

மேலும் படிக்க | தினமும் 30 நிமிடங்கள் போதும்... உடல் கொழுப்பை எரிக்கும் சில எளிய பயிற்சிகள்!

அலோபீசியாவின் அறிகுறிகள்
வெள்ளை புள்ளிகள் மற்றும் கோடுகளின் தோற்றம்
முடியின் வேர்ப்பகுதியில் சிறிய திட்டுகள்
தாடி வருவது குறைவது
நகங்களின் கடினத்தன்மை
நகங்களிலிருந்து பிரகாசம் குறைவது

இந்த நோயை குணப்படுத்த முடியுமா?
இந்த நோய் குணமாகிவிட்டால் முடி மீண்டும் வளரும், ஆனால் சிலருக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.உண்மையில் இந்த நோயை குணப்படுத்த முடியாது. நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அது கட்டுப்படுத்தப்பட்டால் முடி மீண்டும் வரலாம், ஆனால் அவை மீண்டும் கொட்டிப் போகலாம்.

இதற்கு மருத்துவ சிகிச்சையும் தேவை. முடியின் வேர்களில் உள்ள வீக்கம் குறையும் போது முடி மீண்டும் வளரும். உண்மையில் உங்களுக்கு அலோபீசியா டோட்டலிஸ், அலோபீசியா யுனிவர்சலிஸ் என ஏதாவது இருக்கும் என்று தோன்றினால், அதாவது அதற்கான  அறிகுறிகளை கண்டால், தாமதமின்றி மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 25 வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News