ஒமைக்ரான் வைரஸை எளிதாக நினைக்க வேண்டாம் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

ஒமைக்ரான் வைரஸை அவ்வளவு சாதாரணமாக நினைத்து நிராகரித்துவிட முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2021, 06:07 PM IST
ஒமைக்ரான் வைரஸை எளிதாக நினைக்க வேண்டாம் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை! title=

கொரோனா வைரஸை தொடர்ந்து டெல்டா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது.  ஆனால் தற்போது வந்துள்ள ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை காட்டிலும் அதிவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.  இந்த அச்சுறுத்தலால் இந்தியா போன்ற பல நாடுகள் தங்கள் நாடுகளில் கட்டுப்பாடுகளை அதிகளவில் விதித்து வருகின்றன.  இருப்பினும் அவற்றின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே தான் உள்ளது.

ALSO READ | Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்!

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர். பூனம் கேத்திர பால் சிங் கூறுகையில், நமக்கு தெரிந்த வரை ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரசை விட வேகமாக பரவி வருகிறது.  தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் ஒமைக்ரான் வைரஸால் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இருப்பினும் இந்த தொற்றின் மருத்துவ தீவிரத்தன்மை இன்னும் காட்டுக்குள்தான் இருக்கிறது.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை சரியாக கணிக்க இன்னும் அதிகமான தாக்கத்தை தகவல் தேவைப்படுகிறது.  இந்த வைரஸை லேசானது என்று நிராகரித்து விட முடியாது.  இதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.  ஒவ்வொரு நாடும் இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஏற்கனவே கொரோனாவை தடுக்க கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும்.  அதுமட்டுமல்லாது தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், போதுமான ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் போதுமான சுகாதார பணியாளர்கள் இருப்பு போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும்.

omigron

மேலும் தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவுதல் போன்றவற்றை கட்டாயமாக செய்ய வேண்டும்.  தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்தாது என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

omigron

இந்த ஆய்வுக்கு பின்னர் தான் தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரஸின் தீவிரத்தை எவ்வாறு குறைக்கிறது? எப்படி கட்டுக்குள் கொண்டு வருகிறது? என்பது தெளிவாகத் தெரியவரும்.  பொதுவாக இத்தகைய பெரும் தொற்றிற்கு தடுப்பூசி தான் முக்கிய கருவியாக செயல்படும்.  ஆனால் தடுப்பூசி மட்டுமே ஒரு நாட்டை நோயிலிருந்து முழுவதும் விடுவித்துவிட முடியாது.  அதனால் பொது சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை மேற் கொள்வது இத்தகைய தொற்றிலிருந்து மீள வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

ALSO READ | omicron: 3 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு ’ஒமிக்ரான்’

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News