உடற்பயிற்சி செய்த பின்னர் இதை மட்டும் செய்யாதீங்க: பல பிரச்சனைகள் வரலாம்

Drinking Cold water After Workout Health: உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிக்கலாமா? உங்களுக்கும் அந்த பழக்கம் உள்ளதா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 06:45 PM IST
  • உடற்பயிற்சி செய்த பின்னர் குளிர்ந்த நீரை குடிக்கலாமா?
  • இதனால் பிரச்சனை வருமா?
  • இது பல பிரச்சனைகளை உருவாக்கலாம்.
உடற்பயிற்சி செய்த பின்னர் இதை மட்டும் செய்யாதீங்க: பல பிரச்சனைகள் வரலாம் title=

உடற்பயிற்சி செய்த பின்னர் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: உடற்பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படி ஒரு பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை உடனடியாக நிறுத்துங்கள். 

ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் பல வகையான நோய்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த பழக்கம் மாரடைப்பு, எடை அதிகரிப்பு என பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுவதற்கு இதுவே காரணம். இந்த பழக்கத்தால் வேறு என்ன பிரச்சனைகள் வரலாம் என இந்த பதிவில் காணலாம்.

உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை ஏன் குடிக்கக் கூடாது

கடினமான பணிகளை செய்த பிறகு, உங்கள் உடல் வெப்பமடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, ​​​​அது திடீரென்று உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது. இது உங்கள் வொர்க்அவுட்டின் கடின உழைப்பைக் கெடுக்கும். இதனுடன், உங்கள் உடலால் அடுத்தடுத்து குளிர் சூடு என மாறுபட்ட தன்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். 

மேலும் படிக்க | உஷார்! இந்த பழங்களை காலையில் மறந்து கூட சாப்பிடாதீர்கள் 

இதய துடிப்பிலும் விளைவு தெரியும்

இது தவிர, உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பதன் விளைவு இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சியின் போது, ​​உங்கள் நரம்புகளில் விரைவான இரத்த ஓட்டம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் திடீரென்று குளிர்ந்த நீரை உட்கொண்டால், அது உங்கள் நரம்புகளை மிக வேகமாக குளிர்விக்கும். இதனால் பிரச்சனை ஏற்படலாம்.

தலைவலி பிரச்சனையாக உருவாகலாம்

உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடித்தால், தலைவலியும் ஏற்படக்கூடும். சைனஸ் நோயாளிகள் குளிர்ந்த நீரை அருந்தவே கூடாது. ஏனெனில் இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கலாம். அதாவது உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் சைனஸ் பிரச்சனையை மேலும் தூண்டக்கூடும்.

செரிமானத்தையும் பாதிக்கலாம்

இது தவிர, இந்த பழக்கத்தால் உங்கள் செரிமானமும் பாதிக்கப்படலாம். கடுமையான வொர்க்அவுட்டிற்குப் பிறகு திடீரென குளிர்ந்த நீரைக் குடிப்பதால், உங்கள் உடலில் குளிர்-சூடு இரண்டும் கலந்த நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நீங்கள் வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலுமிச்சை விதைகளை தூக்கி எறியாதீங்க: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News