இயற்கையாகவே சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு சுவை கொண்டது. மாவுசத்து நிறைந்த இந்த கிழங்கு வகையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், செலினியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. பலருக்கும் இது சுவையான கிழங்கு என்பது மட்டும் தான் தெரியுமே தவிர இதனால் உடலுக்கு கிடைக்கக்கூடிய இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரியாது. இப்போது இதன் வியக்கவைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
1) சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இருப்பினும், இவை மற்ற மாவுச்சத்துள்ள உணவுகளைப் போலல்லாமல் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
2) இந்த வகை கிழங்கில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகளவு அந்தோசயனின் எனும் பொருள் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நாள் முழுவதும் கணினியில் வேலையா... கண்களை பாதுகாக்கும் ‘சில’ உணவுகள்!
3) ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் உள்ளன. நமது தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான கொலாஜனை இவை வழங்குகின்றன, இதனை நாம் அதிகமாக சாப்பிடுவதால் நமது சருமமும், தலைமுடியும் நன்றாக இருக்கும்.
4) ஊதா நிறம் கொண்ட இந்த இனிப்பு சுவையுடைய கிழங்கு உங்கள் மூளையின் செயல்திறனை ஊக்குவித்து ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் வீக்கம் மற்றும் சோர்வை நீக்கி மூளையை பலப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
5) இதனை சாப்பிடுவதன் மூலம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த செரிமானம் போன்றவை நிகழ்கிறது.
6) சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக செயலாற்றும்போது உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின் சத்து கிடைக்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பிரகாசமான பார்வை திறனை நீங்கள் பெறலாம்.
7) நார்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கு வகை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது. செரிமான அமைப்பை சிறப்பிக்கக்கூடிய பைட்டோஸ்டெரால் எனும் பொருள் இந்த கிழங்கில் இருப்பதால் உங்களது செரிமான திறன் மேம்படும்.
மேலும் படிக்க | பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ