நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலகின் பெரும்பாலான மக்களுக்கு உள்ள முக்கியமான இரண்டு பிரச்சினைகளாகும். இது இன்றைய காலகட்டத்தில் பொதுவான உடல் நல பிரச்சனையாகி விட்டது. இந்த இரண்டு நோய்களும் நேரடியாக நம் உணவு பழக்கத்துடன் தொடர்புடையவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவில் கவனம் செலுத்தினால் சர்க்கரை வியாதி நீங்கும். கூடவே உடல் பருமனும் நிச்சயம் குறையும்.
நீரிழிவு பிரச்சனையை நீக்கும் அத்தகைய ரொட்டியைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம். சர்க்கரை நோயாளிகள் கோதுமை சப்பாத்திக்கு பதிலாக ராகி மாவினால் ஆன ரொட்டிகளை சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான முழு தானியங்களில் கேழ்வரகு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட ராகியை தினமும் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம்.
நம்முடைய பாரம்பரிய உணவு தானியங்களான கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை உண்ணாமல் துரித உணவுகளை சாப்பிடத் தொடங்கியதே சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை தாக்கும் பெரும்பாலான நோய்களுக்கான முக்கிய காரணம்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
ராகி அல்லது கேழ்வரகு என்பது மற்ற தானியங்களை போலவே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம். இது நீரழிவு பிரச்சனையை தீர்ப்பதோடு, ரத்த சோகை, அதிக எடை, தூக்கப் பிரச்சினைகள், பதட்டம், கால்ஷியம் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கும் ஆரோக்கிய உணவாகும்.
ராகி சப்பாத்தி செய்யும் முறை
உடல் எடையை குறைப்பதில் உலகம் முழுவதும் அறியப்பட்ட ராகி, நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சஞ்சீவி போன்றது. ராகி இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
ரொட்டி செய்ய, ஒரு கப் ராகி மாவிற்கு, முக்கால் கப் தண்ணீர் என்ற அளவில், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் சிறிது உப்பு நெய் சேர்த்து, பின்னர் ராகி மாவை அதில் கொட்டி கிளறவும். பின்னர் அதில் சிறிது கோதுமை மாவை சேர்த்து, தண்ணீரை தெளித்து சப்பாதி மாவு பதத்தில் பிசையும். சப்பாத்தியின் ஓரங்கள் உடையாமல் சீராக வருவதற்காகவே கோதுமை மாவு சிறிது சேர்க்கப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் சாப்பாத்தி தயாரிக்கவும்.
மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்
ராகி மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் பாலிபினால்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR