மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் முயன்றவரை எல்லா நடவடிக்கைகளையும் பின்பற்றிய பின்னரும் மருந்துகளை நாடி இருக்கின்றனர். ஆனால் உங்கள் பழக்கங்களை மாற்றுவது மற்றும் உங்கள் வாழ்க்கை முறையிலிருந்து சில விஷயங்களை நீக்குவது இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன்படி சில விஷயங்கள் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். அவை என்னவென்று பார்ப்போம்.
வறுத்த அல்லது பொரித்த உணவுகள்
பொதுவாக பொரித்த உணவுகளில் வெறும் கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மட்டுமே இருக்கும். இது உங்களின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். அதோடு இதில் அதிக அளவில் கலோரிகள் இருக்கும். இது உங்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
மேலும் படிக்க | மனித நுரையீரலில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மைதா உணவுகள்
மைதா சர்க்கரை அளவு, கொழுப்பு அளவை அதிகரிப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மைதா உணவுகள் ரத்தத்தில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து, இதயத்துக்கான ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு இந்திய சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கு விஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதுடன், கிளைசெமிக் இன்டெக்ஸின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோய் பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
ஃபிலேவர்ட் தயிர்
நீரிழிவு நோயாளிகள் ஃபிலேவர்ட் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும். உண்மையில், ஃபிலேவர்ட் தயிரில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனுடன், பல வகையான செயற்கை பொருட்களும் இதில் உள்ளன, இது இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR