உங்களுக்கு பித்த வெடிப்பு போகனுமா? முதல்ல இத பண்ணுங்க!

இந்த குறிப்புகளை பின்பற்றி உங்கள் பாதத்திற்கு பித்த வெடிப்பில் இருந்து நிவாரணம் கொடுங்கள்..  

Last Updated : Feb 14, 2018, 05:47 PM IST
உங்களுக்கு பித்த வெடிப்பு போகனுமா? முதல்ல இத பண்ணுங்க! title=

பாதங்களில் உள்ள தோலில் தண்ணீர்ச்சத்து குறையும் போது தோல் வெடிப்பதால் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. இதனால், அவஸ்தை படும் பலர் அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர்.

பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே இதற்கு காரணமாகும். இதனால் வெடிப்பு ஏற்பட்டு புண்ணாகி பின்னர் கஷ்டப்படுகின்றனர்.

இந்த குறிப்புகளை பின்பற்றி உங்கள் பாதத்திற்கு பித்த வெடிப்பில் இருந்து நிவாரணம் கொடுங்கள்:- 

>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். 

>பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

>கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

>அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

>வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.

>கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். 

>பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு பின்பு இக்கலவையைப் பூசி வர வெடிப்பு நீங்கும்.

>இரவு நேரத்தில், தினமும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Trending News