Corona updates: கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நகரம் எது தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது....

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2020, 10:50 PM IST
  • டெல்லியில் தீபாவளிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது
  • மாநிலத்தில் பகுதியளவு லாக்டவுன் விதிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது
  • அகமதாபாத் நகரில் இரவில் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது
Corona updates: கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நகரம் எது தெரியுமா?   title=

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது, காலவரையின்றி இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

அகமதாபாத்: நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துவிட்டாலும், கோவிட்-19 நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கொரோனாவை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தடுப்பு நடவடிக்கைகளே நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாய் இருக்க ஒரே வழி ஆகும். 

ஆனால், அபாயத்தின் அளவையும் வீரியத்தையும் அறியாத மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க மாநில அரசுகள் தங்கள் அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து காலவரையின்றி இருக்கும். அகமதாபாத்தில் இதுவரை மொத்தம் 46,022 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.   

மும்பையில் கொரோனாவின் இரண்டாவது அலை
மறுபுறம், நாட்டின் பொருளாதாரத் தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை புத்தாண்டில் மும்பையை தாக்கக்கூடும் என்று பிஎம்சி அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் ஆதித்யா தாக்கரே பி.எம்.சி அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தி, நிலைமையை சமாளிக்க தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் லாக்டவுன் விதிக்கப்படலாம்
தீபாவளிக்குப் பின்னர், தலைநகர் டெல்லியில்   கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. டெல்லியில் மீண்டும் லாக்டவுனை விதிக்கலாமா என அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் டெல்லியில் ஓரளவு லாக்டவுன் விதிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளார்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News