COVID-19 Update: புதிய பாதிப்புகள் 78,524; மொத்த பாதிப்புகள் 68 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 78,524 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2020, 04:12 PM IST
  • இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 78,524 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால், 971 பேர் இறந்து விட்டனர்.
  • குணமடையும் விகிதம் 85.02 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.55 சதவீதமாகவும் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
COVID-19 Update: புதிய பாதிப்புகள் 78,524; மொத்த பாதிப்புகள் 68 லட்சத்தை தாண்டியது title=

புதுடெல்லி: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 78,524 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால், 971 பேர் இறந்து விட்டனர். இந்தியாவில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டி, இதுவரை மொத்தம் 68,35,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளடனர்.

இந்தியாவில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, 9,02,425; 58,27,704 பேர் குணம்டைந்துள்ளனர், 1,05,526 பேர் தொற்றுநோய்க்கு எதிரான போரில் தோல்வியடைந்து மரணம் அடைந்துள்ளனர்.

குணமடையும் விகிதம் 85.02 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.55 சதவீதமாகவும் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாயன்று, இந்தியாவில் 61,267 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.  இது ஆகஸ்டுக்குப் பிறகு, ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த அளவு ஆகும். ஆனால் புதன்கிழமை மீண்டும் 72,049 வழக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரா, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இது வரை 39,072 பேர் இறந்து விட்டனர். மொத்தம் 14,80,489 பேர் இதுவரை தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்; இதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தரவுகளின்படி, இந்தியாவில் புதன்கிழமை ஒரே நாளில் 11,94,321 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையை 8,34,65,975 என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

ALSO READ | லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு AYUSH அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News