தைராய்டு தற்போது பொதுவான நோயாக மாறி வருகிறது. இந்த நோய் வயது வேறுபாடில்லாமல் அனைவருக்கும் வரக்கூடியது. இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி. நமது உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஹார்மோன் சுரப்பி, அதிகமாக சுரந்தாலும் பிரச்சனை தான், அதேபோல குறைவாக சுரந்தாலும் சிக்கல் தான். ஹார்மோனை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
இதற்கான வழியும் சுலபமானது தான். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்தினால் போதும், இந்த பெரிய பிரச்சனையைத் தவிர்த்துவிடலாம். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டால் போதும்.
கொட்டைகள் மற்றும் விதைகள் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதால் அவற்றை உணவில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். அதேபோல, தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
தைராய்டு நோயாளிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்கள்
சூரியகாந்தி விதைகள்
தைராய்டு நோயாளிகளுக்கு சூரியகாந்தி விதைகள் நன்மை பயக்கும். சூரியகாந்தி விதைகளில் கலோரிகள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். இவற்றில் செலினியத்தின் அளவு அதிகம். செலினியம் தைராய்டை கட்டுப்படுத்த வேலை செய்கிறது. எனவே, நீங்கள் தைராய்டு நோயாளியாக இருந்தால், சூரியகாந்தி விதைகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
ஆளி விதைகள்
ஆளி விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஏனெனில் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதேபோல, இரும்புச்சத்தும் தேவையான உள்ளதால், ஆளி விதைகளை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து தைராய்டு பிரச்சனை நீங்கும். எனவே, ஆளி விதைகளை தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்ளலாம்.
சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
சியா விதைகள் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்த உதவும் அனைத்துச் சத்துக்களும் சியா விதையில் உள்ளது. தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சியா விதைகளை உட்கொள்ளலாம். அதே நேரத்தில், சியா விதைகள் வீக்கத்தைத் தடுக்க உதவுகின்றன சியா விதைகளை பால் அல்லது தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ