யோகா (Yoga) மற்றும் தியானத்தில் (Meditation) உள்ள அபூர்வ சக்திகளும், உடல் மற்றும் மனதை கட்டுப்படுத்தும் அம்சங்களும், இவற்றால் உண்டாகக்கூடும் மீண்டெழும் திறனும் இவற்றை கோவிட்-19-க்கான (Covid-19) வலுவான துணை- சிகிச்சைகளாக்குகின்றன என அமெரிக்காவின் மாற்று மற்றும் இணை மருந்துகளுக்கான இதழ் (JACM) கூறியுள்ளது. இந்த கூற்றை பல வல்லுநர்கள் சரிபார்த்து அங்கீகரித்துள்ளனர்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் (California University) தீபக் சோப்ரா (Deepak Chopra), MIT-ன் வில்லியம் புஷெல் (William Bushell) மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்கள் ஆகியோர் யோகா மற்றும் தியானத்தின் அபார சக்தியை அங்கீகரித்து விவரிக்கிறார்கள்.
ALSO READ: கொரோனாவுக்கு பயோகானின் சொரியாசிஸ் மருந்தை பயன்படுத்த DGCI ஒப்புதல்!
கோவிட்-19 நோய்த்தொற்றால் உடல் அழற்சி, சோர்வு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. சோர்வானது உடலையும் மனதையும் ஒருங்கே பாதிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியும் கீழ் நோக்கி செல்கிறது. இதற்கான முறையான சிகிச்சையுடன் யோகாசனம், தியானம் மற்றும் பிராணாயாமம் (Pranayam) ஆகியவற்றையும் செய்யும்போது, மருந்தின் வலிமை பன்மடங்கு அதிகரிக்கிறது. இவை தொற்றின் வலிமையை குறைப்பதோடு, கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கான வலிமையையும் உடலுக்கு அளிக்கின்றன. சுவாசத்தை சீராக்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இறுக்கத்தை தளர்த்துகின்றன என்று இவர்கள் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் (America) உலகளவில் பல ஆய்வகங்களிலும் இயற்கை மருத்துவத்தை (Natural Medicine) நோக்கி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் தாக்கும்போது, பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். தொற்றின் காரணமாக ஏற்கனவே உடலின் எதிர்ப்பு சக்தி குறைவதால், மருந்துகளின் பக்கவிளைவுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகையால் யோகா, தியானம் பிராணாயாமம் போன்ற மாற்று மற்றும் இணை மருத்துவ முறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என உலக மருத்துவ வல்லலுநர்கள் கருதுகிறார்கள்.
ALSO READ: கொரோனாவை தவிர்க்க என்ன சாப்பிடலாம்? தெரிந்துக் கொள்ளுங்கள்