பளபளக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? தேங்காய்ப்பால் ஷாம்புவை பயன்படுத்தலாமே?

Coconut Milk Shampoo: சேதமடையும் முடிக்கு ஊட்டமளித்து பாதுகாக்கும் தேங்காய்ப்பால், முடி உலராமல் பாதுகாக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது?.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2023, 05:55 PM IST
  • சேதமடையும் முடிக்கு ஊட்டமளித்து பாதுகாக்கும் தேங்காய்ப்பால்
  • முடி உலராமல் பாதுகாக்கும் ஷாம்பு
  • தேங்காய்ப்பால் ஷாம்பு தயாரிக்கத் தெரியுமா?
பளபளக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? தேங்காய்ப்பால் ஷாம்புவை பயன்படுத்தலாமே? title=

தேங்காய்பாலில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து உள்ளது, இது நமது முடியிழைகளுக்கு அதிக ஈரப்பதத்தை அளிக்கிறது. தேங்காய் பாலை உங்கள் கூந்தல் பராமரிப்பில் சேர்ப்பதால், உங்கள் தலைமுடியின் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். அதுமட்டுமல்ல, சேதமடையும் முடிக்கு ஊட்டமளித்து பாதுகாக்கும் என்பதோடு, முடி உலராமல் பாதுகாக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த தேங்காய்ப்பால்

தேங்காய் பாலில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், முடி இழைகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் என்று கருதப்படுகிறது. தேங்காய்ப் பாலில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்களில் உங்கள் மயிரிழைகளைப் பாதுக்காப்பதுடன், சேதமடைந்த முடியை மீட்டெடுக்க உதவும்.

தேங்காய் பாலின் நன்மைகள்

மென்மையான கூந்தலுக்கு ஆழமாக ஹைட்ரேட் செய்ய தேங்காய் பால் ஷாம்பு உதவும் என்று அழகு சிகிச்சை நிபுணர்உறுதியளிக்கின்றனர். தேங்காய் பால் ஹேர் மாஸ்க் உலர்ந்த, சேதமடைந்த முடியை துரிதமாக சீர் செய்துவிடும்.

மேலும் படிக்க | கட்டுமஸ்தான உடல் வேண்டுமா? புரதச்சத்து அதிகம் உள்ள இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

தேங்காய் பால் ஷாம்பு

தேங்காய் பால், எடை இழப்பு, நீரிழிவு மற்றும் அல்சர் போன்ற நோய்களுக்கு நன்மை பயக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் தேங்காய் பால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் கூந்தலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதில்லும் தேங்காய்ப்பால் ஷாம்பு தலைமுடிகளை பாதுக்காக்கிறது.

இந்த தேங்காய்ப்பால் ஷாம்புவை வீட்டிலேயே தயாரிக்கும் முறையை தெரிந்துக் கொள்ளுங்கள். நமது வீட்டில் சுலபமாக கிடைக்கும்  தேங்காய் பாலில் இருக்கும் இயற்கையான கொழுப்பு அமிலங்கள், முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது.

அதோடு, சேதமடைந்த முடியை சரிசெய்ய உதவும் தேங்காய் பால் ஷாம்பூவை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.....

தேங்காய் பால் ஷாம்பு செய்ய தேவையான பொருட்கள் 

1 கப் தேங்காய் பால்
லாவெண்டர் எண்ணெய் 10 முதல் 15 சொட்டுகள்
2 முதல் 3 வைட்டமின் ஈ எண்ணெய் காப்ஸ்யூல்கள்

மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!

தேங்காய் பால் ஷாம்பு செய்வது எப்படி? 
தேங்காய் ஷாம்பு செய்ய, முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் தேங்காய் பால், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் சேர்க்கவும்.
கிண்ணத்தில் சேர்த்த அனைத்துப் பொருட்களையும் நன்கு கலக்கவும்.
இப்போது இயற்கையான தேங்காய் பால் ஷாம்பு தயார்.
பின்னர் இந்த ஷாம்புவை ஒரு பாட்டிலில் நிரப்பி சேமித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த இயற்கையான ஷாம்புவில், செயற்கையான பொருட்கள் எதுவும் இல்லை, 20 முதல் 25 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடலின் நச்சுக்களை வெளியேற்றி மன அழுத்தத்தை போக்கும் ‘சங்கு பூ’ டீ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News