மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக இந்தியாவில் பல விதவிதமான உணவு வகைகள் மற்றும் பல்வேறு ருசி கொண்ட உணவு வகைகள் அதிகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும்போது எல்லாம் மக்கள் தங்களுடைய ஆர்வத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர், இதனால் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. இதுவரை நீங்கள் மிளகுக்கீரை, சாமந்தி மற்றும் செம்பருத்தி போன்ற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை குடித்து இருப்பீர்கள். ஆனால் வெங்காய தேநீர் பற்றி உங்களுக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, வெங்காய தேநீர் குடிப்பது அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன.
மேலும் படிக்க | Healthy Tips: தினமும் அதிகாலை வெந்நீர், ஆஹா பலன்கள் கிடைக்கும்
வெங்காய தேநீர் தயாரிக்கும் முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கி 2 கப் தண்ணீரில் தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை கலந்து கொண்டு விருப்பப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். சூடாக குடிக்கலாம்.
வெங்காய தேநீரின் நன்மைகள்:
1) வெங்காய தேநீர் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும், இது உடலில் கெட்ட கொழுப்புகள் குவிவதைத் தடுக்கிறது. இதை குடிப்பதால் உடலில் வெப்பம் உண்டாகி ரத்த நாளங்களை சுத்தப்படுத்தப்படுகிறது. மேலும் இது நல்ல கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கிறது, அதிக கொழுப்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.
2) வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளது, இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வெங்காய தேநீர் அதிக கொழுப்பு மற்றும் மோசமான இரத்த ஓட்டம் பிரச்சனையை குறைக்கிறது.
3) வெங்காய தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கலவைகள் உள்ளன, அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கின்றன. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | கருவுறுதலில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ