வழக்கமான இந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொண்டால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்

Breakfast vs Cancer Threat: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள சில உணவுகளை காலை உணவாக உட்கொண்டால், அது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2023, 07:53 AM IST
  • காலை உணவின் முக்கியத்துவம்
  • சில காலை உணவுகள் ஆரோக்கியத்திற்கு சிக்கலை ஏற்படுத்துபவை
  • புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் காலை உணவுகள்
வழக்கமான இந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொண்டால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்   title=

புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோய் என்பதும், சமீப காலமாக இந்த நோய், மிகவும் துரிதமாக அதிகரித்து வருவதும் கவலைகளை ஏற்படுத்துகிறது. மாறிவரும் வாழ்க்கைச்சூழலி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்பவர்களும், இந்த கொடும் நோயில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி. உண்மையில், புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால், அதன் சிகிச்சை கடினமாகிவிடும்.

புற்றுநோய் என்பது இன்றைய காலக்கட்டத்தில் சிகிச்சை செய்து குணப்படுத்தக்கூடியது என்ற நிலைக்கு மருத்துவம் முன்னேறிவிட்டாலும், நோய் வந்தால், ஏற்படும் சிரமங்களும், செலவுகளும் வாழ்க்கை முறை மாற்றங்களும், வாழ்க்கையானது நோய் தாக்குவதற்கு முன்பு இருந்த வாழ்க்கையை திருப்பித் தராது என்பது நிதர்சனம் என்பதையும் மறுக்கமுடியாது.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், இறப்பதையும் உலக சுகாதார அமைப்ப்பு பதிவு செய்துள்ளது. நோய்களால் ஏற்படும் ஒவ்வொரு 6 இறப்பில் ஒன்றுக்கு காரணமாவது புற்றுநோய் என்பது, நிலைமையின் விபரீதத்தை புரிந்துக் கொள்ள ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என அறுதியிட்டு சொல்ல முடியாவிட்டாலும், இந்த நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் இந்த காரணங்களில் பெரும்பாலானவை, நமது வாழ்க்கை முறை மற்றும் நாம் உண்ணும் உணவு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றன. பொதுவாக 5 முதல் 10 சதவீத புற்றுநோய்கள் மட்டுமே மரபணுக்கள் மூலம் தோன்றுபவை. எஞ்சிய சுமார் 95% புற்றுநோயாளிகளுக்கு நோய் ஏற்படுவதற்கான காரணம், வாழ்க்கை முறை அல்லது வசிக்கும் சூழல் ஆகும்.

மேலும் படிக்க | நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... காலை உணவில் சேர்க்க வேண்டியவை!

அதில், மிகவும் எளிதாக தவிர்க்கக்கூடிய புற்றுநோய்க் காரணிகளில் ஒன்று தவறான உணவுப்பழக்கம் என்று கூறலாம். தோராயமாக, 30 முதல் 35 சதவிகிதம் புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாக இருப்பது தவறான உணவுப் பழக்கம் ஆகும். மனிதனின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றாமே புற்றுநோய் உட்பட பல நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்க காரணம் என்பது அதிர்ச்சியானது என்றாலும், தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது.

தவிர்க்க முடியாத இந்த உண்மையை மாற்ற வேண்டுமானால் என்ன செய்வது? நோயைக் கட்டுப்படுத்த நம்மிடம் இருக்கும் ஒரே கட்டுப்பாடான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கலாம். இதில், காலை உணவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இந்த உணவுகளை உண்பதைத் தவிர்த்தால், அதிக நன்மை என்றாலும், தவிர்க்க முடியாது என்ற நிலையில், குறைந்தபட்சம் காலை நேரங்களில் உண்பதை தவிர்ப்பது கொடிய நோய்கள் நம்மை வந்து அண்டாமல் தவிர்க்கும்.

ஏனென்றால், இந்த உணவுகளை காலை உணவாக உண்ணும்போது, இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிற்றில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி, நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

காலை உணவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தேநீர் + பிஸ்கட்: காலை வேளையில், தேநீருடன் பிஸ்கட்களை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயை உண்டாக்கும்.அதிலும் பதப்படுத்தப்பட்ட குக்கீகள் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. இம்பீரியல் காலேஜ் லண்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் 2 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், காலை உணவில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது புற்றுநோய் பன்மடங்கு, குறிப்பாக கருப்பை மற்றும் மூளை புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு: காலை உணவில் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது. அதிலும், காலை உணவில் தேநீருடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது நோயை நாமே வரவேற்பதற்கு சமம் என்றே கூறலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியத்தை குலைக்கும், ஏனென்றால், அதில் பயன்படுத்தப்படும் அதிக அளவு சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு, உடலில் நிறைவுற்ற கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

அதிக வெப்பநிலையில் தயாரிப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனமான அக்ரிலாமைடு அதிகரிக்கிறது, அதனால்தான் காலை உணவில் தேநீருடன் உருளைக்கிழங்கு சிப்ஸை உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் இருந்து தயாரிக்கப்படும் உணவின் நுகர்வு அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பல வகையான புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் உள்ளன, இதன் காரணமாக புற்றுநோயின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இறைச்சி பல நாள்பட்ட நோய்களுக்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை காலை உணவில் உட்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடி உடல் எடையை வேகமாக குறைப்பது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News