முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா வேண்டாமா? சரியான வழி எது?

முட்டை பலர் பிரிட்ஜில் வைக்கும் பழக்கத்தை வைத்திருக்கும் நிலையில், அது சரியா? தவறா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:26 PM IST
  • முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாம்
  • நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்
  • ஆனால் பிரிட்ஜில் வைத்த முட்டையை வெளியில் எடுத்தபின்....
முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா வேண்டாமா? சரியான வழி எது? title=

புரதசத் சத்து மிக்க முட்டை நாள்தோறும் காலை மற்றும் மாலையில் தலா ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை சாப்பிடுவதில் இருக்கும் சந்தேகத்தைப் போலவே, அதனை பிரிட்ஜில் வைக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் இருக்கிறது. இது தொடர்பாக பல கட்டுக்கதைகள் உலாவிக் கொண்டிருக்கும் சூழலில், பல நாட்கள் முட்டையை கெடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் இருக்கிறது. 

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்

சில நாடுகளில் முட்டையை பிரிட்ஜில் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்களின்படி, முட்டையை பொதுவாக பிரிட்ஜில் வைக்கக்கூடாது என கூறுகின்றனர். ஏனெனின் பிரிட்ஜில் வைக்கப்படும் முட்டையின் சுவை மாறிவிடுமாம். இது பொதுவாக கூறப்படும் ஒரு கருத்து. மற்றொருபுறத்தில் பல நாட்கள் முட்டைகள் கெடாமல் இருக்க பிரிட்ஜில் வைப்பதில் தவறில்லை என்றும் கூறப்படுகிறது. இங்கு நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மீன் மற்றும் இறைச்சிகளைப் போன்று முட்டைகளும் ஆபத்தான பாக்டீரியாக்களை உருவாக்க வல்லது. சரியாக சேமிக்கப்படாவிட்டால். முட்டையினால் தொற்று உருவாகி தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. புட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.  

முட்டைகளைப் பொறுத்தவரை சுத்தம் செய்து பிரிட்ஜில் வைக்கலாம். பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக இப்படி வைப்பதில் தவறில்லை. ஆனால், பிரிட்ஜில் வைத்த முட்டையை நீண்ட நேரம் வெளியில் வைத்திருக்கக்கூடாது. மற்ற முட்டைகளைக் காட்டிலும் அவற்றில் தொற்றுகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல சுத்தமான முட்டையை பிரிட்ஜில் வைக்கலாம். உடைந்த முட்டைகளை பிரிட்ஜில் வைப்பது சரியாக இருக்காது. 

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக வளர வீட்டிலேயே இத செஞ்சா போதும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News