இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும்

How To Burn Belly Fat: உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2022, 09:09 PM IST
இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும் title=

உடல் எடையை குறைக்கும் உணவு: அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது யாருக்கும் எளிதானது அல்ல, ஏனென்றால் இதற்கு உடற்பயிற்சியுடன், உணவையும் பழக்க வழக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இரவில் சாப்பிடும் உணவே நமது எடை குறைப்புக்கும் அதிகரிப்புக்கும் அடிப்படையாகிறது.  

நீரிழிவு, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதால், எடை அதிகரிப்பு பல பிரச்சனைகளின் தொடக்கமாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பதால், உடலின் ஒட்டுமொத்த வடிவமும் கெட்டுப் போகிறது.

உடல் எடையை குறைக்க இந்த உணவுகளை இரவில் சாப்பிடுங்கள்
நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் போன்ற நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். அதே போல் பிஸியான வாழ்க்கை முறையாலும் நமது ஆரோக்கியத்தை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.

மேலும் படிக்க | ஆரோக்கிய நன்மை அதிகமாக உள்ள ஐஸ் டீ

இரவில் தூங்கும் முன் சாப்பிட்டால், எடையை வேகமாக குறைக்கும்  உணவுகள் இவை.

தயிர்
இரவில் சாப்பிட்ட பின் கண்டிப்பாக தயிர் சாப்பிட வேண்டும், கலோரிகள் மற்றும் புரதச்சத்து அதிக அளவில் உள்ள தயிர், தசைகளுக்கும் பலம் தரும். , தயிரில் உள்ள நுண்ணூட்டச்சத்து செரிமானத்தை சீராக பராமரித்து உடல் எடையையும் குறைக்கிறது.

பாதாம்
பல சமயங்களில், இரவில் திடீரென பசி எடுக்கும், சில காரணங்களால் தாமதமாக தூங்குபவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. அப்படி இரவில் பசிக்கும்போது பாதாம் சாப்பிடலாம், இது பசியை அடக்குவதோடு, ஆரோக்கியத்தை நிச்சயமாக கெடுக்காது என்பதை உறுதியாக சொல்லலாம். பாதாமில் காணப்படும் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. அது மட்டுமல்ல, பாதாமில் கலோரிகளும் குறைவாக உள்ளன.

வேர்க்கடலை வெண்ணெயுடன் முழு தானிய ரொட்டி
இரவில் பசி எடுத்தால், வேர்க்கடலை வெண்ணெய் தடவி 2 துண்டுகள் முழு தானிய ரொட்டியை சாப்பிடலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க | Weight Loss with Food: இந்த உணவுகளை சாப்பிட்டால் ஒல்லியாகலாம்: எடை குறைப்பு டிப்ஸ்

வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவது எடை அதிகரிக்கும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது, ஆனால் எடையைக் குறைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக, நீண்ட நேரம் பசி இருக்காது, இது எடை குறைக்க உதவுகிறது.

நிபுணர்களின் கருத்து
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' கூறுகையில், இந்த நான்கு பொருட்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, அவை சோர்வை உணராது, தயிரின் நொதிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் அதிக பலன் கிடைக்கும்.

முழு தானிய ரொட்டி வாங்கும் போது, ​​கண்டிப்பாக அவற்றில் உள்ள மூலப் பொருட்களை பற்றி தெரிந்துக் கொண்டு வாங்கவும் என்று சொல்கிரார். வாழைப்பழம் உடலுக்கு உடனடியாக ஆற்றல் அளிப்பது. உடற்பயிற்சிக்கு முன் அதை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.

மேலும்  படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News