Benefits of Brisk Walk: மன அழுத்தத்தை குறைக்கும் வேகமான வாக்கிங்

மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறதாம்! ஆனால் அதற்கு ஆமை நடை போடகூடாது, விறுவிறுப்பாய் வேக நடை போற்றால் மனதில் ஏற்படும் ஏமாற்றங்களின் தாக்கமும் குறைந்துவிடுமாம்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2022, 08:09 PM IST
  • மனச்சோர்வை போக்கும் வேக நடை
  • விறுவிறுப்பாய் நடந்தால், ஏமாற்றமும் ஓடிப்போகும்
  • நடை பயின்றால் போதுமா? அது துரிதமாய் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்
Benefits of Brisk Walk: மன அழுத்தத்தை குறைக்கும் வேகமான வாக்கிங் title=

விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் எளிய செயல்பாடு பல சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். விறுவிறுப்பாக நடந்தால், அவை அளிக்கும் பயன்கள் ஆச்சரியமளிக்கின்றன. 

நடை பயின்றால் போதுமா? அது துரிதமாய் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
வேகமான நடையின் நன்மைகள்
உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நல்லது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மனநலக் குறைவு, குறைவாகவே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நன்மைகளைப் பெற ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை,  வேகமான நடைபயிற்சி கூட சிறந்த முடிவுகளைத் தருவதோடு பல வழிகளில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் (Benefits of Brisk Walk) அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நன்மைகள் ஆச்சரியமளிக்கின்றன

மேலும் படிக்க | பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்

மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கும் நடைபயிற்சி
JAMA Psychiatry இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு சுமார் 2.5 மணிநேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது 25 சதவிகிதம் மனச்சோர்வு அபாயத்தை குறைப்பதாக கூறுகிறது. 
 
பெண்களின் இதய செயலிழப்பு அபாயம் குறைகிறது
2018 ஆம் ஆண்டில் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் 67 வது வருடாந்திர அறிவியல் அமர்வில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய செயலிழப்பு அபாயம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

விறுவிறுப்பான நடைபயிற்சி (ஒரு நேரத்தில் 40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல்) மாதவிடாய் நின்ற பெண்களின் இதய செயலிழப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்க உதவும்.
 
டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வாக்கிங்
நீரிழிவு நோயாளிகளின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் காரணிகளை மெத்தனமாக்கும் கலை, பிரிஸ்க் வாக்கிங்கிற்கு இருக்கிறதாம்.

விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சிகள், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

health 
ஆயுட்காலம் அதிகரிக்கிறது
ஒரு நாளைக்கு 20 நிமிட விறுவிறுப்பான நடை உங்கள் வாழ்க்கையில் பல வருடங்களை சேர்க்கலாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், ஒவ்வொரு நாளும் 20 நிமிட விறுவிறுப்பான நடைப்பயணம், 16-30 சதவிகிதம் வரை அகால மரணம் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவியதாக தெரியவந்துள்ளது. 

விரக்தியைத் தவிர்க்க உதவுகிறது
நீண்ட வேலை நேரம் அல்லது அதிக பணிச்சுமை அல்லது மன அழுத்தத்தை உணர்ந்தால், விறுவிறுப்பாக நடக்கவும். அப்ளைடு சைக்காலஜி இதழில் வெளிவந்த 2017 ஆம் ஆண்டு ஆய்வில், ஒரு மணிநேரம் நீச்சல் அல்லது 90 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயணம், எரிச்சலை குறைப்பதாக கூறுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News