பாகற்காய் உங்கள் நோயை குணப்படுத்தி சூப்பரான பவர் தரும்!

உங்கள் உடலில் நோய்களை குணப்படுத்தி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும் பவர் பாகற்காயிக்கு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2021, 04:20 PM IST
பாகற்காய் உங்கள் நோயை குணப்படுத்தி சூப்பரான பவர் தரும்! title=

நினைத்தாலே நாவில் கசப்புத் தன்மையை உணரச் செய்வதில், பாகற்காய் மிகவும் முக்கியமானது. அதனால்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய். ஆனால் முகத்தை சுளிக்க வைக்க செய்யும் பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது.

பாகற்காயில் (Bitter Gourd) நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.எனவே கசப்பு சுவை (Taste) காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டால் பலன் பெறலாம்.

ALSO READ: பாதம் வெடிப்பு நீங்க சில இயற்கை வழி டிப்ஸ்!

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

அதனால் உங்கள் உடல் நலத்திற்கு மிகுந்த பயனை கொடுக்கும். பாகற்காயை சருமத்தின் மேல் உபயோகித்தால் அது அழகு சம்பந்தமான பயன்களை கொடுக்கும். உடல் நலத்தை நன்கு பாதுகாத்து கொள்ள பாகற்காய் சாறு உபயோகப்படுகிறது. தோல் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்கு இது பயன்படுகிறது. பாகற்காய் சாறு அருந்துவதால் தோல் மற்றும் கூந்தலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் -சி மற்றும் நார்சத்துகள் கிடைக்கின்றன.

தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது

உங்களுக்கு தோல் அரிப்பு மற்றும் தோல் வீக்கம் இருந்தால் பாகற்காய் சாறு அதனை கட்டுப்படுத்தும். பாகற்காயை சிறு துண்டுகளாக அரிந்து அதனை பசை போல் அரைத்து கொள்ள வேண்டும்.இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை சாற்றினை கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி விட வேண்டும். இதன் மூலம் தோல் அரிப்பினை போக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு, பாகற்காய் நல்ல மருந்தாகும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும். பாகற்காயில் நுண்ணுயிர் கிருமிகளையும் கடும் வீக்கத்தையும் போக்கும் தன்மை உள்ளது. 

பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு “கப்” பாகற்காய் “சூப்” எடுத்து, அதில் ஒரு “ஸ்பூன்” எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். 

சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி ஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு தேவைப்படும் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.

ALSO READ: கொய்யா இலைகளால் நன்மைகள் கோடி! பொய்யா வாக்கு இது!!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News