எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான்

Omicron Key Symptoms: டெல்டாவை விட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு மிகவும் தொற்றுநோயானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதன் அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 03:31 PM IST
எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸின் (Coronavirus) புதிய மாறுபாட்டான Omicron இன் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையில், நிபுணர்கள் Omicron இன் சில முக்கிய அறிகுறி இருப்பதாக எச்சரித்துள்ளனர், இது பற்றி மக்களுக்கு தெரியாது, ஆனால் அதை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Omicron சரும தோலை எவ்வாறு பாதிக்கிறது?
தி சன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒமிக்ரானின் (Omicron) அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், புதிய மாறுபாடு உங்கள் தோலில் தடிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு வீக்கம், ரேஷஸ், போன்ற அறிகுறிகளும் ஏற்படுகிறது. சிலருக்கு கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் ஆகியவற்றில் சிவந்த போக கூடும். அல்லது ஊதா நிறத்தில் மாறுதல் ஏற்படும். இதனால் வலி மற்றும் எரிச்சல் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்

Omicron தொற்றினால் தோலில் இந்தப் பிரச்சனைகள் ஏற்படும்
ZOE Covid Symptom Study App இன் படி, Omicron நோயால் பாதிக்கப்பட்ட போது தோல் வெடிப்புகள் ஏற்படும். வல்லுநர்கள் இதை ஒமிக்ரானின் முக்கிய அறிகுறி என்று அழைக்கிறார்கள். Omicron நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் சருமத்தை இரண்டு வழிகளில் பாதிக்கிறது. முதலாவதாக, திடீரென்று உங்கள் தோலில் பல தடிப்புகள் ஏற்படுவது. இரண்டாவது கட்டத்தில், தோலில் சொறி போன்ற அறிகுறி ஏற்படுகிறது.

Omicron தொடர்பான ஆய்வில் இந்த விஷயம் வெளிவந்துள்ளது
Corona இன் டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் குறைவான ஆபத்தானது என்றும், தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 50 முதல் 70 சதவிகிதம் குறைவு என்றும் சில ஆய்வுகள் வெளிப்படுத்தினாலும், புதிய மாறுபாடு டெல்டாவை விட வேகமாக பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Omicron பொதுவாக அறிகுறிகள்
இந்த  Omicron வைரஸ் டெல்டா வகையை காட்டிலும் வீரியம் அற்றதாக தற்போது வரை உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. லேசான காய்ச்சல், பசியின்மை, வறண்ட தொண்டை, அதிக உடல் வலி, துன்பம், வியர்த்து கொட்டுதல் போன்ற அறிகுறிகள் Omicron இல் வரக்கூடும். மேலும் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளும் சிலருக்கு உண்டாக கூடும்.

ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News