இரவில் குளிப்பதால் வரும் ஆரோக்கிய நன்மைகள்: குளித்த பிறகு அனைவரும் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறோம். கோடை காலத்தில் எத்தனை முறை குளித்தாலும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பகலுக்கு பதிலாக இரவில் குளித்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இரவில் குளிப்பதால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் சருமத்தை அழகாக மாற்றுவது வரை, இரவில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இரவில் குளிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
உடலும் மனமும் அமைதியாக இருக்கும்
நாம் குளிப்பதன் மூலம், உடனடியாக நம் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இரவில் குளிப்பது உங்கள் மனநிலையை புத்துணர்ச்சியடையச் செய்து மனதையும் உடலையும் அமைதிப்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா? சம்மரில் எடை குறைக்க இதை செஞ்சா போதும்
நன்றாக தூக்கம் வரும்
இரவில் உறக்கம் கொள்வதில் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் குளித்தால் நல்ல தூக்கம் வரும். ஏனெனில் குளித்தால் மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும்.
எடை குறைக்க உதவும்
இரவில் குளிப்பதும் உடல் எடையை குறைக்க உதவும். இது மட்டுமின்றி ஒற்றைத் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி போன்ற புகார்களும் குறையும்.
சோர்வும் நீங்கும்
நாள் முழுதும் வேலை செய்து, நீங்கள் மிகவும் சோர்வாக இருந்தால், கண்டிப்பாக இரவு தூங்கும் முன் குளிக்கவும். இதனால் உங்கள் சோர்வு நீங்கி லேசாக உணர்வீர்கள்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருக்காது
உயர் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இரவில் குளிக்க வேண்டும். ஏனென்றால் குளித்த பிறகு நீங்கள் நிம்மதியாக, பதட்டம் இல்லாமல் உணர்வீர்கள். இதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
கண்களுக்கு நன்மை பயக்கும்
இரவில் குளிப்பது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இரவில் குளிப்பது உடல் மற்றும் கண்களில் உள்ள உஷ்ணத்தை நீக்கும். இதனால் கண்களுக்கு அதிகப்படியான புத்துணர்ச்சி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 30 ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சியை ஒரே பழத்தில் கொண்ட கனி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR